வெள்ளலூர்
வெள்ளலூர் (ஆங்கிலம்: Vellalur அல்லது Vellalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், சிங்காநல்லூர் ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடைய ரோமானியர்களின் வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.
வெள்ளலூர் | |
அமைவிடம் | 10°58′02″N 77°01′40″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு
மாவட்டம் = கோயம்புத்தூர் கணக்கெடுப்பு வருடம் = 2001 |
[[தமிழ்நாடு
மாவட்டம் = கோயம்புத்தூர் கணக்கெடுப்பு வருடம் = 2001 ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] |
|
[[தமிழ்நாடு
மாவட்டம் = கோயம்புத்தூர் கணக்கெடுப்பு வருடம் = 2001 முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] |
|
மக்களவைத் தொகுதி | வெள்ளலூர் |
மக்கள் தொகை | 17,294 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
பெயர் வரலாறு
வெள்ளலூர்ச் சாசனத்தில் அவ்வூரின் பெயர் வள்ளலூர் அல்லது அன்னதானச் சிவபுரி என்று குறிக்கப்பெற்றுள்ளது[1]. இவ்வூரின் இரண்டு பழைய ஆலங்களில் கோக்கண்டன் வீர நாராயணன், கோக்கண்டன் ரவிகோதை என்ற இரண்டு சேர மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வூர் சில காலங்களுக்கு சேரமன்னர்களின் கீழ் இருந்தாக கொள்ளலாம்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கோயில்கள்
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன.
புகைப்படங்கள்
- வெள்ளலூரில் நொய்யலாற்றுக்கு அருகில் அமைந்துள்ள இயற்கைக் குளம்
- வெள்ளலூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள விநாயகர்
- வெள்ளலூர் கரிவரதராஜப் பெருமாள் கோவில் கோபுரம்
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- கோ.மா.இராமச்சந்திரன் செட்டியார் (1987). கொங்கு நாட்டு வரலாறு. பேரூர், கோயமுத்தூர்: தவத்திரு அடிகளார் தமிழ்க்கல்லூரி. பக். 383.
- "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.