விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா (Bishweshwar Prasad Koirala) (நேபாளி: विश्वेश्वरप्रसाद कोइराला; 8 செப்டம்பர் 1914 – 21 சூலை 1982), நேபாளத்தின் 22வது பிரதம அமைச்சராக 1959 - 1960களில் செயல்பட்ட இவர் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது உடன்பிறந்தவர்களான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், கிரிஜா பிரசாத் கொய்ராலாவும்[1] நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர் நேபாளத்தின் அரசியல்வாதியாகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர்.[1]
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா विश्वेश्वर प्रसाद कोइराला | |
---|---|
![]() | |
1950களில் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா | |
22வது பிரதம அமைச்சர் | |
பதவியில் 27 மே 1959 – 26 டிசம்பர் 1960 | |
அரசர் | மகேந்திரா |
முன்னவர் | சுபர்ண சம்செர் ராணா |
பின்வந்தவர் | துளசி கிரி |
நேபாளி காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தலைவர் | |
பதவியில் 26 மே 1952 – 24 சனவரி 1956 | |
முன்னவர் | மாத்ரிக பிரசாத் கொய்ராலா |
பின்வந்தவர் | சுபர்ணா சம்செர் ராணா |
பதவியில் 23 மே 1957 – 21 சூலை 1982 | |
முன்னவர் | சுபர்ண சம்செர் ராணா |
பின்வந்தவர் | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் |
நேபாள உள்துறை அமைச்சர் | |
பதவியில் 21 பிப்ரவரி 1951 – 12 நவம்பர் 1951 | |
பிரதமர் | மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 8, 1914 வாரணாசி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 21 சூலை 1982 67) காட்மாண்டு, நேபாளம் | (அகவை
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சுசிலா கொய்ராலா |
உறவினர் | மாத்ரிக பிரசாத் கொய்ராலா, கிரிஜா பிரசாத் கொய்ராலா |
பெற்றோர் | கிருஷ்ண பிரசாத் கொய்ராலா (தந்தை) |
கையொப்பம் | ![]() |

விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, முதன் முறையாக நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்ப்பட்ட முதல் நேபாளப் பிரதமர் ஆவார். பதினெட்டு மாத கால பிரதமர் பதவியில் இருந்த போது, நேபாள மன்னர் மகேந்திராவின் ஆணையின் படி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவரது பெரும்பாலான வாழ்க்கை சிறையில் கழிப்பதும், நாடு கடத்தப்படுவதுமாக இருந்தது. இதனால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.[2]
இளமை
வாரணாசியில் பிறந்த கொய்ராலா,[3] தன் தந்தை கிருஷ்ண பிரசாத் கொய்ராலா நிறுவிய பள்ளியில் 14ம் வயது வரை படித்தார்.[4]
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், இவரையும், இவரது உடன்பிறந்தவரான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவையும், பிரித்தானிய இந்திய அரசு கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்தது. 1934ல் பனரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்பில் இளநில பட்டம் பெற்றார்.[5] 1937ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்து, டார்ஜிலிங் நகரத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தினார்.
அரசியல் பணி

1947ல் பி. பி. கொய்ராலா, நேபாளம் சென்று நேபாளி தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவினார். பின்னர் அக்கட்சியின் பெயர் நேபாளி காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
9 மார்ச் 1947ல் விராட்நகரில் நடைபெற்ற சணல் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தை தூண்டியதற்காக, பி. பி. கொய்ராலாவும், கிரிஜா பிரசாத் கொய்ராலாவும், மற்றும் நேபாளி காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்து, 21 நாட்கள் கால்நடையாக நேபாளத் தலைநகரம் காத்மாண்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகாத்மா காந்தியின் கோரிக்கையின் படி, ஆகஸ்டு, 1947ல் அனைவரையும் நேபாள அரசு விடுவித்தது.[6]
நேபாளத்தில் 104 ஆண்டுகால ராணா வம்சத்தின் பரம்பரை பிரதம அமைச்சர் பதவி நீக்கக் கோரி 1951 நேபாள புரட்சியை விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மக்களிடையே பரப்பினார். இப்புரட்சியின் விளைவாக அக்டோபர், 1951ல் ராணா வம்சத்தின் இறுதி பிரதம அமைச்சராக இருந்த மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா பதவி நீக்கம் செய்யப்பட்டு, இவரது மூத்த சகோதர் மாத்ரிக பிரசாத் கொய்ராலா, பிரதம அமைச்சராக நேபாள மன்னர் மகேந்திரா நியமித்தார்.
1959ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற நேபாளி காங்கிரஸ் கட்சியின் சார்பாக, விஸ்வேஷ்வர பிரசாத், மே, 1959ல் நேபாள பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேபாள மன்னர் மகேந்திரா, 15 டிசம்பர் 1960ல் நேபாள அரசியலமைப்பு சட்டத்தையும், நேபாள நாடாளுமன்றத்தை முடக்கியும், நேபாள அமைச்சரவையையும் கலைத்து, விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராவை நாடு கடத்தினார். 1968ல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் கட்சிகள் அற்ற நேபாள பஞ்சாயத்து ஆட்சி முறையில், சூரிய பகதூர் தாபா பிரதம அமைச்சரானர்.
1972ல் பிரேந்திரா நேபாள மன்னரானார். 1976ல் நாடு திரும்பிய விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மீது அரசை கலைப்பதற்கு ஆயுதப் புரட்சியை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக மார்ச், 1978ல் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுக்கப்பட்டார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Girija Prasad Koirala
- Koirala, Bisheshwor Prasad (2001). Atmabrittanta: Late Life Recollections. Kathmandu: Himal Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99933-1-308-4. http://himalbooks.com/shop/products/B.P.-Koirala%E2%80%99s-Atmabrittanta%3A-Late-Life-Recollections.html.
- "B.P. Koirala- National Figure of Nepal: Politics, Literature".
- "Bisheshwar Prasad Koirala | A Life Review | AshishDanai.com.np | Nepali Literature Collection | Sahityasanjal | Audio Novels | Radio Programs | FM | By Ashish Danai".
- "BP Koirala, a life review, AnishDanai.com.np".
- Bhuwan Lal Joshi; Leo E. Rose (1966). Democratic Innovations in Nepal: A Case Study of Political Acculturation. University of California Press. பக். 63. GGKEY:5N30S3HU9BC. https://books.google.com/books?id=MX22o4PJ3Q0C&pg=PA543.
- "B.P. Koirala in Bhola Chaterjee's view"
வெளி இணைப்புகள்
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் சுபர்ண சம்செர் ராணா |
நேபாள பிரதம அமைச்சர் 1959–1960 |
பின்னர் துளசி கிரி |