துளசி கிரி

துளசி கிரி (Tulsi Giri, நேபாளி: तुलसी गिरि 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)[1]நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக [2] 1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர்.[3]

துளசி கிரி
तुल्सी गिरी
23வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
2 ஏப்ரல் 1963  23 டிசம்பர் 1963
அரசர் மன்னர் மகேந்திரா
முன்னவர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
பின்வந்தவர் சூரிய பகதூர் தாபா
பதவியில்
26 பிப்ரவரி 1964  26 சனவரி 1965
அரசர் மன்னர் மகேந்திரா
முன்னவர் சூரிய பகதூர் தாபா
பின்வந்தவர் சூரிய பகதூர் தாபா
பதவியில்
1 டிசம்பர் 1975  12 செப்டம்பர் 1977
அரசர் பிரேந்திரா
முன்னவர் நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்வந்தவர் கீர்த்தி நிதி பிஸ்தா
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 26, 1926(1926-09-26)
சிராஹா, நேபாளம்
இறப்பு 18 திசம்பர் 2018(2018-12-18) (அகவை 92)
பூதநீலகண்டம், காட்மாண்டு
குடியுரிமை நேபாளம்
அரசியல் கட்சி சுயேச்சை
இருப்பிடம் பெங்களூரு, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் யெகோவாவின் சாட்சிகள்

1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[4][5]

மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர்.[6] துளசி கிரி, சாரா எனும் கிறித்தவ பெண்ணை மணந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.

1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி இலங்கையில் குடியேறினார்.[7][8][9] அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 2005 வரை தங்கினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
நேபாள பிரதம அமைச்சர்
1960 1963
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
சூரிய பகதூர் தாபா
நேபாள பிரதம அமைச்சர்
1964 1965
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
நேபாள பிரதம அமைச்சர்
1975 1977
பின்னர்
கீர்த்தி நிதி பிஸ்தா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.