நேபாள மன்னர்கள்

நேபாள மன்னர் அல்லது மகாராஜாதிராஜா (King of Nepal) என்ற பட்டத்துடன் நேபாளத்தில் நேபாள இராச்சியத்தை நிறுவிய ஷா வம்சத்து மன்னர்கள் முடியாட்சி முறையில் நேபாள நாட்டை 1768 முதல் 2008 முடிய 240 ஆண்டுகள் ஆண்டனர்.

மகாராஜாதிராஜா of நேபாள இராச்சியம்
முன்னாள் மன்னராட்சி
மரபுச் சின்னம்
நேபாள நாட்டின் முதல் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா
முதல் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா
கடைசி மன்னர் ஞானேந்திரா
அலுவல் வசிப்பிடம் நாராயணன்ஹிட்டி அரண்மனை, காட்மாண்டு
Appointer ஷா வம்சம்
மன்னராட்சி துவங்கியது 25 செப்டம்பர் 1768
மன்னராட்சி முடிவுற்றது 28 மே 2008
தற்போதைய வாரிசு ஞானேந்திரா
ஞானேந்திரா, இறுதி நேபாள மன்னர்

2008ல் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தீர்மானத்தின் படி, நேபாளத்தில் முடியாட்சி முறை ஒழிக்கும் வரை ஷா வம்சத்து மன்னர்கள் நேபாளத்தை ஆண்டனர். [1]

வரலாறு

ஷா வம்சத்தின் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவால்[2] நிறுவப்பட்டது. இவர் காத்மாண்டு சமவெளியை ஆண்ட நேவாரிகளான மல்ல வம்சத்தின் மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவை, கீர்த்திப்பூர் போர் மற்றும் காட்மாண்டுப் போர்களில் வென்று காத்மாண்டு சமவெளியின் காட்மாண்டு, கீர்த்திபூர், பக்தபூர், லலித்பூர் நகரங்களைக் கைப்பற்றி, 25 செப்டம்பர் 1768ல் ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினார்.

இவரது மகன் ராணா பகதூர் ஷா நேபாளத்தின் மேற்கில் உள்ள கார்வால், குமாவுன், சிர்முர் பகுதிகளையும் மற்றும் நேபாளத்தின் கிழக்கில் உள்ள மொரங், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளைக் கைப்பற்றி நேபாள இராச்சியத்தை விரிவாக்கினார்.

1846 முதல் நேபாள இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்த ஜங் பகதூர் ராணா நேபாள மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அவரும் அவரது வம்சத்தவர்களும் நேபாள இராச்சியத்தை மறைமுகமாக ஆண்டனர். 1951ல் நேபாளத்தில் நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக, ராணா வம்சத்தினரது அதிகாரம் நீக்கப்பட்டு, மீண்டும் ஷா வம்ச மன்னர்களின் முடியாட்சி நிலைநாட்டப்பட்டது.

1990ல் நடைபெற்ற மக்கள் இயக்கத்தின் காரணமாக, நவம்பர், 1990ல் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை கொண்டு வரப்பட்டது.

1996 - 2006 முடிய மாவோயிசவாதிகள் நடத்திய நேபாள மக்கள் புரட்சி காரணமாக, 1 நவம்பர் 2005ல் மன்னர் ஞானேந்திரா நெருக்கடி நிலை சட்டத்தை நடைமுறைப்படுத்தி, நேபாள அரசியலமைப்பு சட்டத்தையும் நீக்கி, நாட்டின் முழு ஆட்சி அதிகாரத்தை தன் கையில் கொண்டு வந்தார். . [3]

24 ஏப்ரல் 2006ல் துவங்கிய ஜனநாயக இயக்கத்தவர்களின் கடுமையான தொடர் போராட்டங்களால், நேபாள மன்னர் ஞானேந்திரா 2006ல் தன் மன்னர் பதவியைத் துறந்தார். கலைக்கப்பட்ட நேபாள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை மீண்டும் நிறுவப்பட்டது.[4][5] 21 நவம்பர் 2006ல் நேபாள அரசு, மாவோயிசவாதிகளுடன் செய்து கொண்ட விரிவான அமைதி உடன்படிக்கையின் படி, நேபாளத்தில் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்தது. [6]

15 சனவரி 2007ல் புதிதாக நிறுவப்பட்ட நேபாள இடைக்கால சட்டமன்றம், மன்னரின் ஆட்சி அதிகாரங்களை நீக்கியது. இறுதியாக, 28 மே 2008ல், நேபாளத்தின் முதல் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கூடி, அதிகாரப்பூர்வமாக முடியாட்சி முறையை நீக்கி, நேபாளத்தை ஜனநாயக கூட்டாட்சி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. [7]

நேபாள மன்னர்கள் (1768–2008)

  1. பிரிதிவி நாராயணன் ஷா - (ஆட்சிக் காலம்), (25 செப்டம்பர் 1768 - 11 சனவரி 1775)
  2. பிரதாப் சிங் ஷா - (11 சனவரி 1775 - 17 நவம்பர் 1777)
  3. ராணா பகதூர் ஷா - (17 நவம்பர் 1777 - 8 மார்ச் 1799)
  4. கீர்வான் யுத்த விக்ரம் ஷா - (8 மார்ச் 1799 - 20 நவம்பர் 1816)
  5. ராஜேந்திர விக்ரம் ஷா - (20 நவம்பர் 1816 - 12 மே 1847)
    (பதவி துறந்தார்)
  6. சுரேந்திர விக்ரம் ஷா - (12 மே 1847 - 17 மே 1881)
  7. பிரிதிவி வீர விக்ரம் ஷா - (17 மே 1881 - 11 டிசம்பர் 1911)
  8. திரிபுவன் வீர விக்ரம் ஷா
    (முதலாம் ஆட்சிக் காலம்) (11 டிசம்பர் 1911 - 7 நவம்பர் 1950)
    (நாடு கடத்தப்படல்)
  9. ஞானேந்திரா (7 நவம்பர் 1950 - 7 சனவரி 1951)
    (பதவி இறக்கப்பட்டார்)
  10. திரிபுவன் வீர விக்ரம் ஷா
    (இரண்டாம் ஆட்சிக் காலம்) (7 சனவரி 1951 - 13 மார்ச் 1955)
  11. மகேந்திரா - (14 மார்ச் 1955 - 31 சனவரி 1972- 1 சூன் 2001)
    (கொல்லப்படுதல்)
  12. திபெந்திரா (தற்கொலை முயற்சியில் நினைவின்றி இறத்தல்) (1 சூன் 2001 - 4 சூன் 2001)
  13. ஞானேந்திரா - (4 சூன் 2001 - 28 மே 2008)
    (நேபாளத்தில் முடியாட்சி முறை ஒழிக்கப்படல்)

நேபாள அரசக் கொடிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.