கிருஷ்ண பிரசாத் பட்டாராய்

கிருஷ்ண பிரசாத் பட்டாராய் (Krishna Prasad Bhattarai) (நேபாளி: कृष्णप्रसाद भट्टराई; 13 டிசம்பர் 1924  4 மார்ச் 2011) முடியாட்சிக்குட்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட நேபாள நேபாள மன்னர்களின் 24 வது பிரதம அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.[1] கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தில் ஜனநாயகம் மலருவதற்கு நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதால், பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.[2]

கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
कृष्णप्रसाद भट्टराई
கிருஷ்ண பிரசாத் கிஷண்ஜி பட்டாராய்
29வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
31 மே 1999  22 மார்ச் 2000
அரசர் மன்னர் பிரேந்திரா
முன்னவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்வந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பதவியில்
19 ஏப்ரல் 1990  26 மே 1991
அரசர் மன்னர் பிரேந்திரா
முன்னவர் லோகேந்திர பகதூர் சந்த்
பின்வந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
4வது தலைவர், நேபாள காங்கிரஸ்
பதவியில்
17 சனவரி 1992  10 மே 1996
பின்வந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பதவியில்
12 பிப்ரவரி 1976  16 சனவரி 1992 (தற்காலிகமாக)
முன்னவர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
பிரதிநிதிகள் சபைத் தலைவர்
பதவியில்
மே 1959  26 டிசம்பர் 1960
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 13, 1924(1924-12-13)
வாரணாசி, இந்தியா
இறப்பு 4 மார்ச்சு 2011(2011-03-04) (அகவை 86)
கோதாவரி நகராட்சி, லலித்பூர், நேபாளம்
அரசியல் கட்சி நேபாளி காங்கிரஸ்
பட்டப்பெயர்(கள்) கிஷண்ஜி, சாந்தமான தலைவர்

1990ல் ஜனநாயக இயக்கங்களின் தீவிர போராட்டங்களின் விளைவாக, நேபாளத்தில் அரசியல் கட்சிகள் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையும், அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி முறையும் 1990ல் கொண்டுவரப்பட்டது.

கிருஷ்ண பிரசாத் பட்டாராய் நேபாளி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேபாள பிரதம அமைச்சராக, 19 ஏப்ரல் 1990 முதல் 26 மே 1991 முடியவும், பின்னர் 31 மே 1999 முதல் 22 மார்ச் 2000 முடியவும் இரண்டு முறை பதவி வகித்தவர்.

பட்டாராய் நேபாள காங்கிரஸ் கட்சியின் அலுவல் தலைவராக, 12 பிப்ரவரி 1976 முதல் 16 ஆண்டுகள் இருந்தவர். பின்னர் 1992 முதல் 1996 முடிய நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர்.

இவர் தமது 87வது அகவையில் உடல்நலக் குறைவின்மையால் காட்மாண்டுவில் காலமானார். [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

அரசியல் பதவிகள்
முன்னர்
லோகேந்திர பகதூர் சந்த்
நேபாள பிரதம அமைச்சர்
1990–1991
பின்னர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா
முன்னர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா
நேபாள பிரதம அமைச்சர்
1999–2000
பின்னர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.