டேவிட் பென்-குரியன்

டேவிட் பென்-குரியன் (David Ben-Gurion, அக்டோபர் 16, 1886 - டிசம்பர் 1, 1973) இஸ்ரேலின் முதல் பிரதமர் ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் சிடே போக்கர் (Sde Boker) என்னும் பாலைவனப் பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் அந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது.

டேவிட் பென்-குரியன்


דָּוִד בֶּן-גּוּרְיּוֹן

1st இஸ்ரேல் பிரதமர்
பதவியில்
2 நவமொஅர் 1955  21 ஜூன் 1963
முன்னவர் மோஷே ஷாரெட்
பின்வந்தவர் லேவி எஷ்கோல்
பதவியில்
14 மே 1948  7 டிசம்பர் 1953
முன்னவர் இல்லை
பின்வந்தவர் மோஷே ஷாரெட்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 16, 1886(1886-10-16)
Płońsk, போலந்து (ரஷ்யப் பேரரசு)
இறப்பு 1 திசம்பர் 1973(1973-12-01) (அகவை 87)
இஸ்ரேல்
அரசியல் கட்சி Mapai, ராஃபி, தேசியப் பட்டியல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.