வண்ணம் (பாநடை வகை)

வண்ணம் என்னும் சொல் பாடலில் வரும் நடைநலத்தைக் குறிக்கும். இந்த நடைநலத்தைத் தொல்காப்பியம் 20 வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. பொருள்-நோக்கில் வரிசைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ள அவை இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. [1]

  1. அகப்பாட்டு வண்ணம்
  2. அகைப்பு வண்ணம்
  3. அளபெடை வண்ணம்
  4. இயைபு வண்ணம்
  5. உருட்டு வண்ணம்
  1. எண்ணு வண்ணம்
  2. ஏந்தல் வண்ணம்
  3. ஒரூஉ வண்ணம்
  4. ஒழுகு வண்ணம்
  5. குறுஞ்சீர் வண்ணம்
  1. சித்திர வண்ணம்
  2. தாஅ வண்ணம்
  3. தூங்கல் வண்ணம்
  4. நலிபு வண்ணம்
  5. நெடுஞ்சீர் வண்ணம்
  1. பாஅ வண்ணம்
  2. புறப்பாட்டு வண்ணம்
  3. முடுகு வண்ணம்
  4. மெல்லிசை வண்ணம்
  5. வல்லிசை வண்ணம்

வண்ணங்கள் 100 வகை

  1. தூங்கிசை வண்ணம்
  2. ஏந்திசை வண்ணம்
  3. அடுக்கிசை வண்ணம்
  4. பிரிந்திசை வண்ணம்
  5. மயங்கிசை வண்ணம்
  1. அகவல் வண்ணம்
  2. ஒழுகிசை வண்ணம்
  3. வல்லிசை வண்ணம்
  4. மெல்லிசை வண்ணம்
  1. குற்றெழுத்து வண்ணம்
  2. நெட்டெழுத்து வண்ணம்
  3. வல்லெழுத்து வண்ணம்
  4. மெல்லெழுத்து வண்ணம்
  5. இடையெழுத்து வண்ணம்

ஆகியவற்றை ஒன்றோடொன்று உறழ (5 பெருக்கல் 4 பெருக்கல் 5) வண்ணம் 100 என அமையும் [2]

வண்ணம் நூல் வகை

  • உடற்கூற்று வண்ணம் - 14ஆம் நூற்றாண்டு பட்டினத்தார் (பட்டணத்தார்) பாடல்
  • உடற்கூற்று வண்ணம் - அருணகிரியார் இப்பெயருடன் ஒரு நூல் பாடினார் என்பர். [3]
  • சந்தக் குழிப்பு வரும் பாடல்களும் வண்ணத்தின் வகையினவே.
  • ஆண்கலை, பெண்கலை வண்ணம் [4]
  • அருணகிரிநாதர் திருவகுப்பு [5]

வண்ணம் (சந்த நடை)

தனத்தான தனனதன
தனத்தான தனனதன
தனத்தான தனனதன - தந்ததனனா

என்பது போலத் தாளச்சந்தம் கொண்டு வரும் பாடல்கள் சந்தவண்ணப் பாடல்கள்.

அருணகிரி நாதரின் திருப்புகழ், திருவகுப்பு முதலான பாடல்கள் வண்ணம் என வழங்கப்படாத வண்ணப் பாடல்கள். பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் இயற்றிய ஆதிமெய் உதயபூரண வேதாந்தத்தில் [6]பாடியுள்ள பூரண வண்ணப்பா[7] [8], மேற்கண்ட பல வண்ண வகைகளை உள்ளடக்கியது. கவிராச பிள்ளை பாடிய திருவண்ணாமலையார் வண்ணம் இவ் வகையில் தோன்றிய முதல் வண்ணப் பாடல்கள். [9]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம், செய்யுளியல்
  2. அவிநயம் - யாப்பருங்கல விருத்தி - நூற்பா 95 விளக்கம்
    • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
  3. விருத்தப்பாவில் முன் இரண்டு அடிகளில் தலைவன் ஒருவனின் புகழும். பின் இரண்டு அடிகளில் தலைவி ஒருத்தியின் கலக்கமும் கூறி, தலைவியின் கலக்கத்தைத் தலைவன் போக்கவேண்டும் என ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்டிருக்கும்.
  4. தனத்தான தனனதன - என்பது போன்ற பலவகையான ஓசைவாய்பாடுகள் பெற்று வரும்.
  5. ஆதிமெய் உதயபூரண வேதாந்தம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)
  6. பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய பூரண வண்ணப்பா
  7. பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய பூரண வண்ணப்பா ஒலிவடிவம்
  8. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, 2005, பக்கம் 253, 254
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.