நெடுஞ்சீர் வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
நெடுஞ்சீர் வண்ணம் என்பது செய்யுளில் நெடில் எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
- நீரூர் பாண யாறே காடே
- நீலூர் காயாப் பூவி யானே
- காரூர் பாண மாவே யானே
- யாரோ தாமே வாழா மோரே
- ஊரூர் பாகா தேரே
- பீரூர் தோளாள் பேரூ ராளே [1]
- யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
- சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு [2]
அடிக்குறிப்பு
- யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
- திருக்குறள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.