முசிறி (திருச்சி மாவட்டம்)
முசிறி (Musiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். திருச்சிக்கு வடமேற்கில் 32 கி.மீ தொலைவில் முசிறி பேரூராட்சி உள்ளது.
முசிறி | |
அமைவிடம் | 10°56′N 78°27′E |
நாடு | ![]() |
பகுதி | சோழ நாடு |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | முசிறி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 28 (2011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 82 மீட்டர்கள் (269 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/musiri |
வரலாறு

ஒப்புமை நினைவால் கருவூர்ச் சேரர் சூட்டிய பெயர் இந்த ஊர் முசிறி. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்). இதன் பெயர்தான் காவிரிக்கரை முசிறிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.93°N 78.45°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பேரூராட்சியின் அமைப்பு
18.80 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,764 வீடுகளும், 28,727 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]
கல்வி
முசிறியில் மொத்தம் 4 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
- அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (முசிறி to திருச்சி சாலை)
- அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (முசிறி to தா.பேட்டை சாலை)
- அமலா பெண்கள் மேல்நிலை பள்ளி [தமிழ் & ஆங்கிலம் (அரசு உதவி)] (முசிறி to துறையூர் சாலை)
- சாந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி (முசிறி to தா.பேட்டை சாலை)
கல்லூரி
முசிறி அருகே 4 கி.மீ தொலைவில் வடுகபட்டி என்னும் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது. இது 1968 முதல் செயல்பட்டு வருகின்றது.
மேலும் முசிறி - துறையூர் நெடுஞ்சாலையில் முசிறியிலிருந்து சரியாக 5 கி.மீ தொலைவில் புதுப்பட்டி என்னும் சிற்றூரில் MIT என்னும் தனியார் பல்-தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது
பிற தகவல்கள்
மேலும் முசிறி வளர்ச்சி பெற்று வரும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். இங்கே 2 பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் குணசீலம் என்னும் ஊரில் அமையப் பெற்ற வைணவ தலமே பிரசன்னா வெங்கடாசலபதி ஆலயமாகும். மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "Musiri". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- முசிறி பேரூராட்சியின் இணையதளம்
- [பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]
- Musiri Population Census 2011