மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஆரன் ஸ்டார்க் (Mitchell Aaron Starc, பிறப்பு: 30 சனவரி 1990) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆஸ்திரேலிய தேசியத் துடுப்பாட்ட அணி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடி வருகிறார். இவர் இடது கை விரைவு வீச்சாளர் மற்றும் திறமையாக கீழ் வரிசையில் இடது கை மட்டையாடுபவர் ஆவார். 2015 துடுப்பாட்ட உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் ஒரு முக்கிய வீரராக இருந்தார், மேலும் அந்தத் தொடர் முழுவதும் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதால் இவர் தொடர் நாயகன் விருதினை வென்றார். [1] அந்தத் தொடரில் 49 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் அதிக இலக்குகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இவர் 5 ஆம் இடத்தில் உள்ளார். [2]

மிட்ச்செல் ஸ்டார்க்
Mitchell Starc

ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மிட்ச்செல் ஆரன் ஸ்டார்க்
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 425) 1 டிசம்பர், 2011:  நியூசிலாந்து
கடைசித் தேர்வு 21–25 ஆகத்து, 2013:  இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 185) 20 அக்டோபர், 2011:  இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 18 சனவரி, 2015:   இந்தியா
சட்டை இல. 56
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009– நியூ சவுத்து வேல்சு புளூசு (squad no. 56)
2011– சிட்னி சிக்சர்சு
2012– யோர்க்சயர் (squad no. 56)
2014 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
தரவுகள்
தேஒ.நா.மு.தப.அ
ஆட்டங்கள் 15 30 45 49
ஓட்டங்கள் 485 161 838 269
துடுப்பாட்ட சராசரி 30.31 32.20 24.64 29.88
100கள்/50கள் 0/4 –/1 0/5 –/1
அதிகூடியது 99 52* 99 52*
பந்துவீச்சுகள் 3,138 1,431 7,658 2,472
விக்கெட்டுகள் 50 59 137 97
பந்துவீச்சு சராசரி 35.44 20.11 31.44 21.12
5 விக்/இன்னிங்ஸ் 2 4 4 5
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 6/154 6/43 6/154 6/43
பிடிகள்/ஸ்டம்புகள் 6/– 5/– 22/– 9/–

சனவரி 19, 2015 தரவுப்படி மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

நவம்பர் 15, 2015 அன்று, நியூசிலாந்தின் ரோஸ் டெய்லருக்கு எதிராக மணிக்கு 160.4 கிமீ வேகத்தில் வீசினார். இதன்மூலம் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மிக வேகமாக பதிவு பந்து வீசியவர் எனும் சாதனை படைத்தார். [3] இலங்கைக்கு எதிராக 2016 ஆகஸ்ட் 21 அன்று 100 ஒருநாள் இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் விரைவாக 100 இலக்குகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளராக ஸ்டார்க் ஆனார். 52 ஆட்டப் பகுதிகளில் இவர் இந்தச் சாதனையினைப் படைத்தார்.இதர்கு முன்பாக 53 ஆட்டப் பகுதிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சக்லைன் முஷ்டாக்கின் (19 வயதில்) சாதனையை முறியடித்தார். இருப்பினும், 19 மாதங்களுக்குப் பிறகு, 25 மார்ச் 2018 அன்று, 44 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானால் இவரது சாதனை முறியடிக்கப்பட்டது. [4] பிப்ரவரி 2019 நிலவரப்படி, ஸ்டார்க் இந்த சாதனையை எட்டிய விரைவு வீச்சாளராக இருக்கிறார்.

ஆத்திரேலியா, சிட்னியின் போல்கம் இல்சு என்ற புறநகரில் பிறந்த இவர் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பள்ளியில் கல்வி கற்றார். 2010 இறுதியில் ஆத்திரேலிய அணியின் இந்தியப் பயணத்தின் போது ஜோசு ஆசில்வுட் காயமடையவே இவர் இறுதிப் பகுதியில் இவர் ஆத்திரேலிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 2010 அக்டோபரில் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விசாகப்பட்டினத்தில் ஆடினார். ஆனாலும் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

ஸ்டார்க் தனது முதலாவது தேர்வுப் போட்டியை 20100 டிசம்பர் 1 இல் நியூசிலாந்துக்கு எதிராக பிறிஸ்பேனில் விளையாடி,[5] இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[6]

2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினால் வாங்கப்பட்டார்.

30 டிசம்பர் 2016 அன்று, குத்துச்சண்டை நாள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக, ஓர் ஆட்டப் பகுதியில் எம்.சி.ஜி.யில் அதிக ஆறுகள் எடுத்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் சாதனையை முறியடித்தார். அந்தப் போட்டியில் இவர் 7 ஆறு ஓட்டங்களை அடித்தார் .

நவம்பர் 2017 இல், ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் ஒவ்வொரு ஆட்டப் பகுதிகளிலும் மூவிலக்கினை எடுத்த முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனை படைத்தார். அதே நேரத்தில் 2017–18 ஷெஃபீல்ட் ஷீல்ட் பருவத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். [7] [8]

தனிப்பட்ட வாழ்க்கை

ஸ்டார்க் ஸ்லோவேன் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். [9] இவர் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டும் பிராண்டன் ஸ்டார்க்கின் மூத்த சகோதரர் ஆவார். [10]

2015 ஆம் ஆண்டில், இவருக்கும் சக ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் அலிசா ஹீலியுடன் நிச்சயதார்த்தம் ஆனது.[11] இவர்கள் 15 ஏப்ரல் 2016 அன்று திருமணம் செய்து கொண்டனர். 1950 கள் மற்றும் 1960 களில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரோஜர் மற்றும் ரூத் பிரிடாக்ஸ் மற்றும் 1980 கள் மற்றும் 1990 களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கை டி அல்விஸ் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோருக்குப் பிறகு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் மூன்றாவது திருமணமான ஜோடி ஸ்டார்க் மற்றும் ஹீலி மட்டுமே. [12] அவர்கள் 9 வயதில் இருந்தபோது சந்தித்தனர், இருவரும் வடக்கு மாவட்டங்களுக்கு குச்சக் காப்பாளர்களாக இருந்தபோது சந்தித்தனர். [13]

ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கில் கிரேட்டர் வெஸ்டர்ன் சிட்னி ஜயண்ட்ஸை ஸ்டார்க் ஆதரிக்கிறார். [14]

சாதனைகள்

தேர்வு 5 விக்கெட்டுகள் கைப்பற்றல்

#தரவுகள்ஆட்டம்எதிராகஅரங்குநகரம்நாடுஆண்டு
16/1545 தென்னாப்பிரிக்காவாக்கபேர்த்ஆத்திரேலியா2012
25/636 இலங்கைபெல்லரைவ் ஓவல் அரங்கம்ஹோபார்ட்ஆத்திரேலியா2012

ஒருநாள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றல்

#தரவுகள்ஆட்டம்எதிராகஅரங்குநகரம்நாடுஆண்டு
15/429 பாக்கித்தான்சார்ஜா துடுப்பாட்ட அரங்குசார்ஜாஅமீரகம்2012
25/2016 மேற்கிந்தியத் தீவுகள்வாக்கபேர்த்ஆத்திரேலியா2013
35/3217 மேற்கிந்தியத் தீவுகள்வாக்காபேர்த்ஆத்திரேலியா2013
46/4330 இந்தியாஎம்சிஜிமெல்பேர்ண்ஆத்திரேலியா2015

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.