ஹோம்புஷ்
ஹோம்புஷ் (Homebush) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரத்தின் ஒரு புறநகர் ஆகும். இது சிட்னி நகர மையத்தில் இருந்து 15 கிமீ மேற்கே ஸ்ட்ரத்ஃபீல்ட் மாநகரசபையின் உள்ளூராட்சியில் அமைந்துள்ளது. ஹோம்புஷ் மேற்கு, ஹோம்புஷ் குடா ஆகியன இதன் அருகில் உள்ள புறநகர்கள் ஆகும்.
ஹோம்புஷ் Homebush சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் | |
ஹோம்புஷ் பொது நூலகம் | |
அஞ்சல் குறியீடு: | 2140 |
உள்ளூராட்சிகள்: | ஸ்ட்ராத்ஃபீல்ட் மாநகரசபை |
மாநில மாவட்டம்: | ஸ்ட்ரத்ஃபீல்ட் |
நடுவண் தொகுதி: | ரீட் |
வரலாறு
ஹோம்புஷ் என்ற புறநகர் 1800களில் அப்போதைய குடியேற்ற நாட்டின் உதவி அறுவை மருத்துவராக இருந்த டார்சி வென்ட்வர்த் என்பவரால் அமைக்கப்பட்டது. இவருக்கு அப்போது இப்பகுதியில் 3.73 கிமீ² பரப்பு நிலம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியை அவர் ”புதர்களில் வீடு" ('home in the bush') என அழைத்தார் என்பர்."[1].
போக்குவரத்து
இங்குள்ள "ஹோம்புஷ் தொடருந்து நிலையம்" சிட்னி நகரையும், மேற்குப் புறநகர்களையும் இணைக்கிறது. பரமட்டா வீதி, மற்றும் எம்4 அதிவேக நெடுங்சாலை ஆகியன ஹோம்புஷ் இனூடாகச் செல்கின்றன.
வணிகப் பகுதி
த கிறசெண்ட், ரொச்செஸ்டர் சாலை, மற்றும் பர்லிங்டன் சாலை ஆகியவற்றில் பல வணிக, பலசரக்கு, மற்றும் உணவுச் சாலைகள் காணப்படுகின்றன. இலங்கை, இந்திய உணவுச் சாலைகள், பலசரக்குக் கடைகள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.
பள்ளிகள்
- ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலை - அரச ஆரம்பப் பள்ளி
- ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை - அரச உயர் பள்ளி
- ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் இயங்குகிறது.
மக்கள்
2006 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, ஹோம்புஷ் நகரில் 7,016 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 3,552 ஆண்கள், 3,464 பெண்கள், 15 ஆஸ்திரேலியப் பழங்குடியினர் ஆவர். 44.4% பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்[2], இந்தியாவில் பிறந்தவர்கள் (8.9%), இலங்கை (8.5%), சீனா (8.5%), கொரியா (8.3%), வியட்நாம் (2.1%) ஆவர். ஆங்கிலத்த்துக்கு அடுத்ததாக தமிழ் மொழி பேசுபவர்களே (11.5%) இங்கு அதிகம் ஆவர்[2].
சமயம்
கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுவோர் 23.8% உம், அதற்கடுத்தபடியாக இந்துக்கள் (17.8%) ஆவர்[2].
காட்சியகம்
- முன்னாள் அஞ்சல் நிலையம்
- த கிறசென் தெருவில் உள்ள கடைகள்
- பரமட்டா தெருவில் அமைந்துள்ள முன்னாள் நாடக அரங்கு
- ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலை
மேற்கோள்கள்
- Jones, Michael (1985). Oasis in the West: Strathfield's first hundred years. North Sydney: Allen & Unwin Australia. ISBN 0-86861-407-6 (page 15)
- 2006 Census QuickStats: Homebush (State Suburb)