மாங்குளம், மதுரை மாவட்டம்
மாங்குளம் (Mangulam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது மதுரை நகரில் இருந்து கிழக்கே மேலூர் செல்லும் வழியில் 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.[4] மாங்குளத்திற்குத் தெற்கே மதுரை மேற்கு வட்டம், மேற்கே அலங்காநல்லூர் வட்டம், மேற்கே மதுரை கிழக்கு வட்டம், வடக்கே நத்தம் வட்டம் ஆகியன அமைந்துள்ளன.
மாங்குளம் | |
அமைவிடம் | 10°01′51″N 78°20′21″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் T. G. வினய், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 139 மீட்டர்கள் (456 ft) |
குறியீடுகள்
|

சிறப்புகள்
இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.[5][6] மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில்[4][7] உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணபடுகின்றன.[8] சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.[6]
மாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டில் இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[9] இங்குள்ள மலையில் காணப்படும் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9] இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[10] இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.[11]
இவற்றையும் பார்க்க
- மாங்குளம் கல்வெட்டுகள்
- நெடுஞ்செழியன் (மாங்குளம்)
- மாங்குளம், இலங்கை ஊர்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "Mangulam". Department of Archaeology, Government of Tamil Nadu. பார்த்த நாள் 21 பெப்ரவரி 2014.
- ஐராவதம் மகாதேவன் (2003). Early Tamil epigraphy from the earliest times to the sixth century A.D.. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-01227-1. http://books.google.co.in/books?id=DZBkAAAAMAAJ&q=mangulam+iravatham+mahadevan&dq=mangulam+iravatham+mahadevan&hl=en&sa=X&ei=aakJU5b-O8mfkAX-ooDQCA&ved=0CCoQ6AEwAA.
- "Kalugumalai". பொன் பல்கலைக்கழகம்.
- Gaṇeśa Lālavānī (1991). Jainthology: An Anthology of Articles Selected from the Jain Journal of Last 25 Years. Jain Bhawan. http://books.google.co.in/books?id=LpnXAAAAMAAJ&q=mangulam+Kalugumalai&dq=mangulam+Kalugumalai&hl=en&sa=X&ei=q6oJU9TOKsW8kQW11oHYDg&ved=0CDgQ6AEwAw.
- Prema Kasturi; Chithra Madhavan (2007). South India heritage: an introduction. East West Books (Madras). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-88661-64-0. http://books.google.com/books?id=_HwMAQAAMAAJ.
- "Jaina treasure trove in Mankulam village". தி இந்து. 1 சனவரி 2009. http://www.thehindu.com/todays-paper/jaina-treasure-trove-in-mankulam-village/article365626.ece.
- "மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம்.
- "Protected Monuments in Tamil Nadu". Archeological Survey of India. "S. No.8 — Ovamalai Kalvettu (inscriptions)"