பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு
பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாடு (Commonwealth Heads of Government Meeting, CHOGM) என்பது அனைத்துப் பொதுநலவாய நாடுகளினதும் அரசுத் தலைவர்கள் பங்குபற்றும் உச்சி மாநாடு ஆகும். இம்மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவ்வமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்பெறுகிறது. இம்மாநாடு நடைபெறும் நாட்டின் அரசுத் தலைவர், பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடப்புத் தலைவராகவும் செயல்படுவார். பொதுநலவாயத்தின் தலைவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி 1973 ஆம் ஆண்டில் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் முதன் முதலில் பங்குபற்றியதில் இருந்து அனைத்து மாநாடுகளிலும் பங்குபற்றி வருகிறார்.[1]. ஆனாலும், 87 வயதாகும் மகாராணியின் தேகநிலை இடம்கொடுக்காததால், கொழும்பில் நடைபெறவிருக்கும் 2013 மாநாட்டில் மகாராணிக்குப் பதிலாக வேல்சு இளவரசர் சார்லசு கலந்து கொள்கிறார்.[1]
பொதுநலவாய தலைவர்களின் முதலாவது மாநாடு 1971 இல் சிங்கப்பூரில் நடைபெற்றது. மொத்தம் 21 தடவைகள் மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக 2011 இல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது.
பொதுநலவாயத் தலைவர்களின் உச்சி மாநாடுகளில் உறுப்புநாடுகள் எதிர்கொள்ளும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள், மற்றும் தற்கால நிகழ்வுகள் ஆராயப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றுவந்த இனவொதுக்கல் கொள்கை, மற்றும் அதனை முடிவுக்குக் கொண்டு வருவது, பாக்கித்தான், பிஜி நாடுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகள், சிம்பாப்வே நாட்டில் தேர்தல் ஏமாற்று போன்றவை இவற்றுள் சிலவாகும். சில வேளைகளில், உறுப்பு நாடுகள் உச்சி மாநாட்டில் பொதுத் தீர்வு ஒன்றை எட்டி அதனைக் கூட்டு அறிக்கை மூலம் வெளியிடுகின்றன. 1997 ஆம் ஆண்டு முதல் மாநாடு நடைபெறும் நாடு பொதுவான "கருப்பொருள்" ஒன்றை அறிவித்து, அதனைக் குறித்து விவாதங்கள் இடம்பெறுகின்றன.[2]
மாநாடுகளின் பட்டியல்
ஆண்டு | நாள் | நாடு | நகரம் | Retreat | தலைவர் |
---|---|---|---|---|---|
1971 | 14–22 சனவரி | ![]() | சிங்கப்பூர் | N/A | லீ குவான் யூ |
1973 | 2–10 ஆகத்து | ![]() | ஒட்டாவா | Mont-Tremblant | Pierre Trudeau |
1975 | 29 ஏப்ரல் – 6 மே | ![]() | கிங்ஸ்டன் | Michael Manley | |
1977 | 8–15 சூன் | ![]() | இலண்டன் | Gleneagles Hotel | James Callaghan |
1979 | 1–7 ஆகத்து | ![]() | லுசாக்கா | லுசாக்கா | கென்னத் கவுண்டா |
1981 | 30 செப்டம்பர் – 7 அக்டோபர் | ![]() | மெல்பேர்ண் | கான்பரா | மால்கம் பிரேசர் |
1983 | 23–29 நவம்பர் | ![]() | கோவா (மாநிலம்) | Fort Aguada | இந்திரா காந்தி |
1985 | 16–22 அக்டோபர் | ![]() | நசாவு | Lyford Cay | Lynden Pindling |
1986 | 3–5 ஆகத்து | ![]() | இலண்டன் | N/A | மார்கரெட் தாட்சர் |
1987 | 13–17 அக்டோபர் | ![]() | வான்கூவர் | Okanagan | Brian Mulroney |
1989 | 18–24 அக்டோபர் | ![]() | கோலாலம்பூர் | லங்காவி | மகாதீர் பின் முகமது |
1991 | 16–21 அக்டோபர் | ![]() | ஹராரே | விக்டோரியா அருவி | ராபர்ட் முகாபே |
1993 | 21–25 அக்டோபர் | ![]() | Limassol | George Vasiliou | |
1995 | 10–13 நவம்பர் | ![]() | ஆக்லன்ட் | Millbrook | Jim Bolger |
1997 | 24–27 அக்டோபர் | ![]() | எடின்பரோ | St Andrews | டோனி பிளேர் |
1999 | 12–14 நவம்பர் | ![]() | டர்பன் | ஜார்ஜ் ட்வுன் | தாபோ உம்பெக்கி |
2002 | 2–5 மார்ச்சு | ![]() | Coolum | Hyatt Regency | ஜோன் ஹவார்ட் |
2003 | 5–8 டிசம்பர் | ![]() | அபுஜா | Aso Rock | Olusegun Obasanjo |
2005 | 25–27 நவம்பர் | ![]() | வல்லெட்டா | Mellieħa | Lawrence Gonzi |
2007 | 23–25 நவம்பர் | ![]() | கம்பாலா | Munyonyo | Yoweri Museveni |
2009 | 27–29 நவம்பர் | ![]() | Port of Spain | Laventille Heights | Patrick Manning |
2011 | 28–30 அக்டோபர் | ![]() | பேர்த் | Kings Park | ஜூலியா கிலார்ட் |
2013 | 15–17 நவம்பர் | ![]() | கொழும்பு | Waters Edge | மகிந்த ராசபக்ச |
2015 | அறிவிக்கப்படவில்லை | ![]() | TBA | TBA |
அடிக்குறிப்புகள்
- "Queen to miss Commonwealth meeting for first time since 1973" The Guardian, 7 May 2013
- Ingram, Derek (January 1998). "Edinburgh Diary". The Round Table 87 (345): 13–16. doi:10.1080/00358539808454395.
வெளி இணைப்புகள்
- Commonwealth Heads of Government Meeting page on the Commonwealth Secretariat web site
- Kampala' 2007, CHOGM 2007 Official page
- CHOGM count Down, CHOGM News
- CHOGM 2007, CHOGM 2007 Kampala Uganda, Updates and information
- CHOGM 2007 Highlights & News, CHOGM 2007 Highlights
- CHOGM 2011, Australian Government
- CHOGM 2013, CHOGM 2013 Official website