பூலாம்பட்டி
பூலாம்பட்டி (ஆங்கிலம்:Poolampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் எடப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Poolampatti பூலாம்பட்டி | |
---|---|
பேரூராட்சி | |
![]() பூலம்பட்டி படகுப் பயணம் | |
அடைபெயர்(கள்): kutty kerala sura boys | |
![]() ![]() Poolampatti | |
ஆள்கூறுகள்: 11°39′12″N 77°46′23″E | |
நாடு | ![]() |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN-52 |
இணையதளம் | www.townpanchayat.in/poolampatti |
அமைவிடம்
எடப்பாடி வட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பேரூராட்சி, சேலத்திலிருந்து 49 கிமீ தொலைவில் உள்ளது. குட்டி கேரளா என்று அழைக்கப்படுகிறாது இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 22 கிமீ தொலைவில் உள்ள மேட்டூர் அணையில் உள்ளது. இதன் கிழக்கே எடப்பாடி 12 கிமீ; மேற்கே நெருஞ்சிப்பேட்டை 6 கிமீ; வடக்கே மேட்டூர் 17 கிமீ; தெற்கே சங்ககிரி 27 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 38 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,698 குடும்பங்களும், 9,477 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 67.25% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
தொழில்
காவிரியின் கரையில் அமைந்திருப்பதால் இந்த கிராமம் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற நன்செய் பயிர்கள் அதிகம் விளைகின்றன. பூலாம்பட்டி அருகில் உள்ள தடுப்பணை மூலம் ஆற்றில் விவசாயத்திற்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது.வெகு சிறிய அளவில் மீன்பிடிப்பும் நடைபெறுகிறது. சில மீனவர்கள் பயணிகளை ஆற்றில் படகு சவாரி அழைத்துச் சென்றும் சம்பாதிக்கின்றனர்.