சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் இருபத்திரெண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சங்ககிரியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,036 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,813 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 11 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 22 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- காத்தேரி
- புல்லகவுண்டம்பட்டி அக்ரகாரம்
- காவேரிப்பட்டி
- கோணேரிப்பட்டி அக்கிரகாரம்
- மொரூர் மேற்கு
- இருகலூர்
- அன்னதானப்பட்டி
- கோட்டவரதம்பட்டி
- சுங்குடிவரதம்பட்டி
- வடுகப்பட்டி
- காவேரிபட்டி அக்கிரகாரம்
- கோணேரிப்பட்டி
- புல்லகவுண்டம்பட்டி
- ஆலாத்தூர்
- சின்னகவுண்டனூர்
- மொட்டையனூர்
- சன்னியாசிப்பட்டி அக்கிரகாரம்
- வீராச்சிபாளையம்
- தேவனகவுண்டனூர்
- எவெலி (Iveli)
- மொரூர் கிழக்கு
- ஒலக்கசின்னமனூர்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.