புளூட்டோ

புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ), என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[lower-alpha 6] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.

புளூட்டோ
Pluto
  
புளூட்டோ.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கிளைட் டோம்பா
கண்டுபிடிப்பு நாள் பெப்ரவரி 18, 1930
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 134340 புளூட்டோ
சிறு கோள்
பகுப்பு
காலகட்டம்ஜே2000
சூரிய சேய்மை நிலை
சூரிய அண்மை நிலை
  • 4,437,000,000 கிமீ
  • 29.657 வாஅ
(1989 செப் 5)
அரைப்பேரச்சு
  • 5,874,000,000 கிமீ
  • 39.264 வாஅ
மையத்தொலைத்தகவு 0.248 807 66
சுற்றுப்பாதை வேகம்
  • 90,613.305 நாட்கள்
  • 248.09 ஆண்டுகள்
  • 14,164.4 புளூட்டோ சூரியநாட்கள்
சூரியவழிச் சுற்றுக்காலம் 366.73 நாட்கள்
சராசரி சுற்றுப்பாதை வேகம் 4.666 கிமீ/செ
சராசரி பிறழ்வு 14.86012204°
சாய்வு
  • 17.141 75°
  • 11.88° சூரியனின் நிலக்கோட்டிலிருந்து
Longitude of ascending node 110.303 47°
Argument of perihelion 113.763 29°
துணைக்கோள்கள் 5
சிறப்பியல்பு
சராசரி ஆரம்
புறப் பரப்பு
கனஅளவு
நிறை
அடர்த்தி 2.03 ± 0.06 கி/செமீm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்
விடுபடு திசைவேகம்1.229 கிமீ/செ[lower-alpha 4]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம்
  • −6.387 230 நா
  • 6 நா 9 ம 17 மீ 36 செ
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் 47.18 கிமீ/ம
அச்சுவழிச் சாய்வு 119.591 ± 0.014° (சுற்றுவட்டம் வரை)[lower-alpha 5]
வடதுருவ வலப்பக்க ஏற்றம் 312.993°
வடதுருவ இறக்கம் 6.163°
எதிரொளி திறன்0.49–0.66
தோற்ற ஒளிர்மை 13.65 முதல் 16.3[1]
(mean is 15.1)
பெயரெச்சங்கள் புளூட்டோனிய
வளிமண்டலம்

கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[2]

வகைப்பாடு

கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள்

  1. கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.
  2. நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
  3. தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.

புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.

புளூட்டோவின் சரோனும் சூரியனும்
புளூட்டோவின் சுற்றுப்பாதை

புளூட்டோவின் துணைக்கோள்கள்

கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.

புளூட்டோவும் அதன் துணைக்கோள்களும்
பெயர் கண்டுபிடித்த ஆண்டு விட்டம்
(கிலோமீட்டர்கள்)
நிறை
(நிலவின் கிலோகிராம்கள்)
சுற்றாரம்
(கிலோமீட்டர்கள்)
சுற்றுக்காலம் (d) பருமன் (mag)
புளூட்டோ 1930 2,306
(66% நிலவு)
1.305 ×1022
(18% நிலவு)
2,035 6.3872
(25% நிலவு)
15.1
சரோன் 1978 1,205
(35% நிலவு)
1.52 ×1021
(2% நிலவு)
17,536
(5% நிலவு)
6.3872
(25% நிலவு)
16.8
எஸ் 2012 2012 10–25 ? ~42,000 +/- 2,000 20.2 +/- 0.1 27
நிக்சு 2005 91 4 ×1017 48,708 24.856 23.7
எஸ் 2011 2011 13–34 ? ~59,000 32.1 26
ஐடுரா 2005 114 8 ×1017 64,749 38.206 23.3

இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.

மூல நூல்

குறிப்புகள்

  1. மேற்பரப்பளவு இலிருந்து கணிக்கப்பட்டது, இங்கு r - ஆரை.
  2. கனவளவு v, இலிருந்து கணிக்கப்பட்டது, இங்கு r - ஆரை.
  3. மேற்பரப்பு ஈர்ப்புவிசை இலிருந்து கணிக்கப்பட்டது. இங்கு G - புவியீர்ப்பு மாறிலி, m -திணிவு, r - ஆரை.
  4. விடுபடு திசைவேகம் 2Gm/r இலிருந்து கணிக்கப்பட்டது.
  5. சாரோனின் சுற்றின் திசைப்போக்கின் படி, சாரோனின் சுற்று புளூட்டோவின் சுழலச்சை ஒத்தது என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது..
  6. புளூட்டோ எரிசு குறுங்கோளைப் போன்று கிட்டத்தட்ட அதே அளவானது, ஏறத்தாழ 2330 கிமீ, ஆனால் 28% அதிக நிறையுடையது. எரிசு கைப்பர் பட்டையில் உள்ள ஒரு சிதறிய-வட்டத்தட்டுப் பொருள் ஆகும். சிதறிய பொருட்களைக் கருத்தில் கொள்ளாவிட்டால் கைப்பர் பட்டையில் உள்ள மிகப் பெரிய விண்பொருளாக புளூட்டோவைக் கொள்ளலாம்.

மேற்கோள்கள்

  1. "AstDys (134340) Pluto Ephemerides". Department of Mathematics, University of Pisa, Italy. பார்த்த நாள் 2010-06-27.
  2. "(134340) Pluto". Hamilton.dm.unipi.it. AstDyS. பார்த்த நாள் 2011-11-22.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.