டிரைட்டன் (துணைக்கோள்)
டிரைட்டன் (Triton) என்பது நெப்டியூன் கோளின் மிகப் பெரும் நிலவு ஆகும். ஆங்கிலேய வான்வெளியியலாளர் வில்லியம் லாசெல் 1846, அக்டோபர் 10 அன்று இதனைக் கண்டறிந்தார். சூரியக் குடும்பத்திலேயே எதிர்ச் சுற்றில் (கோளின் சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில்) வலம் வருகின்ற பெரிய நிலவாக டிரைட்டன் விளங்குகிறது. 2,700 கிமீ விட்டமுள்ள, இந்த நிலவு சூரியக் குடும்பத்திலேயே ஏழாவது பெரிய நிலவாக உள்ளது. இதன் எதிர்ச்சுற்றுத் தன்மையாலும் தனிமக் கலப்பு புளூட்டோவினுடையதைப் போலவே உள்ளதாலும் கைப்பர் பட்டையிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.[10] டிரைட்டனின் மேற்பரப்பில் உறைந்த நைதரசன், தண்ணீர் பனிக்கட்டிகளிலான தரைப்பரப்பும் [11] இவற்றினடியே கல்லும் மாழையும் கொண்ட கருவகமும் உள்ளது.[5] மொத்தத் திண்மையில் மூன்றில் இரு பாகம் கருவகம் கொண்டுள்ளது.டிரைட்டனின் சராசரி அடர்த்தி 2.061 கிராம்கள் per கன சதுர செண்ட்டிமீட்டர் (0.0745 lb/cu in)[4] யில் ஏறத்தாழ 15–35% தண்ணீர் பனிக்கட்டிகளாலானது.[5]
![]() வாயேஜர் 2 அனுப்பிய டிரைட்டனின் நெப்ட்யூனிய அரைக்கோளத்தின் ஒளிப்படம். கீழேயுள்ள பளீரெனும், சற்றே இளஞ்சிவப்பான, தெற்கு முனைய முனை நைதரசன் மற்றும் மீதேன் பனிக்கட்டிகளாலானது; அவற்றின் மீது நைதரசன் வளிம சுடு பாய்ம ஆக்கிகள் விட்டுச்சென்ற தூசுத்துகள்கள் கற்றையாகக் காண்கின்றன. பெரும்பாலும் கருமையான மேல்பகுதியில் டிரைட்டனின் "கேன்டலூப் தரை"யும் பனிக்கட்டி எரிமலைகளும் புவித்தட்டு அமைப்புக்களையும் காணலாம். கீழ் வலதுபுறத்தில் பல அடர்நிற வினோத புள்ளிகளை (maculae)க் காணலாம். |
|
கண்டுபிடிப்பு |
|
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | வில்லியம் லாசல் |
கண்டுபிடிப்பு நாள் | அக்டோபர் 10, 1846 |
பெயர்க்குறிப்பினை |
|
வேறு பெயர்கள் | நெப்டியூன் I |
அரைப்பேரச்சு | 354 759 km |
மையத்தொலைத்தகவு | 0.000 016[1] |
சுற்றுப்பாதை வேகம் | −5.876854 d (எதிர்ச்சுற்று)[1] |
சாய்வு | 129.812° (நீள்வட்டத்துடன்) 156.885° (நெப்டியூனின் நடுக்கோட்டிற்கு)[2][3] 129.608° (நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு) |
இது எதன் துணைக்கோள் | நெப்டியூன் |
சிறப்பியல்பு |
|
சராசரி ஆரம் | 1353.4 ± 0.9 கிமீ[4] (0.2122 Earths) |
புறப் பரப்பு | 23 018 000 கிமீ2[lower-alpha 1] |
கனஅளவு | 10 384 000 000 கிமீ3[lower-alpha 2] |
நிறை | 2.14×1022 கிலோ (0.003 59 புவி)[lower-alpha 3] |
அடர்த்தி | 2.061 கி/செமீ3[4] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.779 மீ/வி2[lower-alpha 4] |
விடுபடு திசைவேகம் | 1.455 கிமீ/வி[lower-alpha 5] |
சுழற்சிக் காலம் | ஒருங்கிசை |
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 5 நா, 21 ம, 2 நிமி, 53வி[5] |
அச்சுவழிச் சாய்வு | 0 |
எதிரொளி திறன் | 0.76[4] |
வெப்பநிலை | 38 K[5] |
தோற்ற ஒளிர்மை | 13.47[6] |
விண்மீன் ஒளிர்மை | −1.2[7] |
பெயரெச்சங்கள் | டிரைட்டோனிய |
வளிமண்டலம் |
|
பரப்பு அழுத்தம் | 1.4–1.9 பா[5] (1/70 000 the surface pressure on Earth)[8] |
வளிமண்டல இயைபு | நைதரசன்; மீதேன் சுவடுகள்.[9] |
கண்டுபிடிப்பும் பெயரிடலும்

டிரைட்டன் துணைக்கோளானது நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டுப் 17 நாட்களில் அக்டோபர் 10, 1846 இல் வில்லியம் லாசல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.[12] 1820 இல் வில்லியம் லாசல் தனது அமெச்சூர் தொலைநோக்கிக்கு கண்ணாடிகளைச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட ஜோன் ஹேர்செல், அதற்குத் துணைக்கோள்கள் உள்ளதா எனத் தேடிப் பார்க்கும்படி ஒரு கடிதம் எழுதினார். வில்லியம் லாசலும் தேடிப் பார்த்துக் கடிதம் கிடைத்த எட்டு நாட்களின் பின்னர் டிரைட்டனைக் கண்டுபிடித்தார்.[13][12]
குறிப்புகள்
- Surface area derived from the radius r: 4*pi*r2.
- Volume v derived from the radius r: 4/3*pi*r3.
- Mass m derived from the density d and the volume v: m=d*v.
- Surface gravity derived from the mass m, the ஈர்ப்பியல் மாறிலி g and the radius r: g*m/r2 .
- Escape velocity derived from the mass m, the ஈர்ப்பியல் மாறிலி g and the radius r: sqrt((2*g*m)/r).
மேற்கோள்கள்
- David R. Williams (23 November 2006). "Neptunian Satellite Fact Sheet". NASA. மூல முகவரியிலிருந்து 2011-10-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-18.
- Jacobson, R. A. — AJ (2009 April 3). "Planetary Satellite Mean Orbital Parameters". JPL satellite ephemeris. JPL (Solar System Dynamics). பார்த்த நாள் 2011-10-26. Archived அக்டோபர் 5, 2011 at WebCite
-
எஆசு:10.1088/0004-6256/137/5/4322 10.1088/0004-6256/137/5/4322
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - "Planetary Satellite Physical Parameters". JPL (Solar System Dynamics). மூல முகவரியிலிருந்து 2010-01-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-26.
- "Encyclopedia of the Solar System". (2nd). (2007). Ed. Lucy Ann Adams McFadden, Lucy-Ann Adams, Paul Robert Weissman, Torrence V. Johnson. Amsterdam; Boston: Academic Press. 483–502. ISBN 978-0-12-088589-3.
- "Classic Satellites of the Solar System". Observatorio ARVAL. மூல முகவரியிலிருந்து 2011-08-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-09-28.
- Fischer, Daniel (12.2.2006). "Kuiperoids & Scattered Objects". Argelander-Institut für Astronomie. மூல முகவரியிலிருந்து 2011-10-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-07-01.
- "Neptune: Moons: Triton". நாசா. மூல முகவரியிலிருந்து 2011-10-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-09-21.
- A L Broadfoot, S K Bertaux, J E Dessler et al. (திசம்பர் 15, 1989). "Ultraviolet Spectrometer Observations of Neptune and Triton". சயன்சு 246 (4936): 1459–1466. doi:10.1126/science.246.4936.1459. பப்மெட்:17756000. Bibcode: 1989Sci...246.1459B.
- Craig B Agnor, Douglas P Hamilton (May 2006). "Neptune's capture of its moon Triton in a binary–planet gravitational encounter". Nature 441 (7090): 192–194. doi:10.1038/nature04792. பப்மெட்:16688170. Bibcode: 2006Natur.441..192A.
- Prockter, L. M.; Nimmo, F.; Pappalardo, R. T. (2005-07-30). "A shear heating origin for ridges on Triton". Geophysical Research Letters 32 (14): L14202. doi:10.1029/2005GL022832. Bibcode: 2005GeoRL..3214202P. http://www.es.ucsc.edu/~fnimmo/website/Prockter_et_al.pdf. பார்த்த நாள்: 2011-10-09.
- William Lassell (November 12, 1847). "Lassell's Satellite of Neptune". Monthly Notices of the Royal Astronomical Society 8 (1): 8. Bibcode: 1847MNRAS...8....9B.
-
William Lassell (November 13, 1846). "Discovery of Supposed Ring and Satellite of Neptune". Monthly Notices of the Royal Astronomical Society 7 (9): 157. Bibcode: 1846MNRAS...7..157L.
William Lassell (December 11, 1846). "Physical observations on Neptune". Monthly Notices of the Royal Astronomical Society 7 (10): 167–168. Bibcode: 1847MNRAS...7..297L.
Lassell, W. (1847). "Observations of Neptune and his satellite". Monthly Notices of the Royal Astronomical Society 7 (17): 307–308. doi:10.1002/asna.18530360703. Bibcode: 1847MNRAS...7..307L.
வெளி இணைப்புகள்
- Triton Profile at NASA's Solar System Exploration site
- Triton page at The Nine Planets
- Triton page (including labelled Triton map) at Views of the Solar System
- Movie of Triton's rotation from the National Oceanic and Atmospheric Administration site
- Triton images from Planetary Photojournal
- Triton Nomenclature from the USGS Planetary Nomenclature web site
- Paul Schenk's 3D images and flyover video of Triton
- Ted Stryk processed Triton Cresent Triton