பார்ப்பான்

பார்ப்பார்தவிர்த்த, அந்தணர், அந்தணாளர் முதலான சொற்கள் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அகத்திணை வாயில்

பார்ப்பான் அகத்திணை மாந்தர் வாயில்களில் ஒருவன். [1] தொல்காப்பியம் இவனைப் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் எனக் குறிப்பிடுகிறது. [2] கலித்தொகை இவ்வின மாந்தரை முக்கோல் பகவர் எனக் குறிப்பிடுகிறது. [3] முக்கோல் அந்தணர்க்கு உரியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை [4] இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம். இதனால் பார்ப்பான், அந்தணன் எனவும் வழங்கப்படுவான் என்பது தெளிவாகிறது. அந்தணரைத் தொல்காப்பியம் அந்தணாளர் எனவும் குடிப்பிடுகிறது. [5] அந்தணர் என்போர் அறவோர் எனத் திருக்குறள் குறிப்பிடுவதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். [6] பார்ப்பார், அறிவர் ஆகியோர் எல்லாருக்கும் பொதுவானவற்றைக் கூறுவதால் எல்லாரும் கேட்பர். [7] கொண்டுதலைக்கழியும் காலத்தில் வழியில் தலைவன் தலைவியரைக் கண்ட பார்ப்பார், தேடிவந்த செவிலிக்கு அறிவுரை கூறுகின்றனர். [8]

சங்ககாலத்தில் பார்ப்பார்

கபிலர் தன்னை அந்தணன் எனக் கூறிக்கொள்கிறார். பாரிமகளிரைக் கபிலர் பார்ப்பார்க்கு மணம் முடித்து வைக்கிறார்.சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் தன்னைப் பார்ப்பான் என்கிறார். பாலைக் கௌதமனார் வேள்வி செய்யச் சொல்லி அதில் தானும் தன் பார்ப்பினியும் மறைகின்றனர்.

காண்க

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் கற்பியல் 52.
  2. தொல்காப்பியம் செய்யுளியல் 182
  3. கலித்தொகை 9
  4. தொல்காப்பியம் மரபியல் 71
  5. தொல்காப்பியம் மரபியல் 73
  6. திருக்குறள் 30
  7. தொல்காப்பியம் செய்யுளியல் 189
  8. பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
    மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
    நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
    நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
    தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
    யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
    சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! (கலித்தொகை 9)

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.