விருந்தினர்

விருந்தினர் என்போர் விருந்தாளிகள். வடநூலார் இவர்களை ‘அதிதி’ என்பர். [1] தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். கற்பியல் வாழ்க்கையில் தலைவன் தலைவியர் கூடி வாழ உதவி புரியும் வாயில்களாகவும் விளங்கினர்.

சொல்விளக்கம்
  • விருந்து என்னும் சொல்லே விருந்தினரைக் குறிக்கும். [2]
  • நூலுக்கு உரிய வனப்புகள் எட்டில் ஒன்று விருந்து (புதுமை) என்னும் வனப்பு
அகவாழ்வில் விருந்தினர்

தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் ஒருவர் விருந்தினர். [3] விருந்து வந்தால் களவு ஒழுக்கமும் தடைபடும். [4] தலைவி ஊடாமல் இருக்கத் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். [5] தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல். [6]

புறவாழ்வில் விருந்தினர்

இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர். [7] விருந்தோம்பல் பற்றித் திருக்குறள் சிறப்பாக எடுத்துரைக்கிறது.[8]

அடிக்குறிப்பு

  1. Atithi devo bhava Sanskrit: अतिथि देवो भवः; English: 'The guest is God' or 'Guest become God'
  2. தொல்காப்பியம் கிளவியாக்கம் 57
  3. தொல்காப்பியம் கற்பியல் 52
  4. தொல்காப்பியம் களவியல் 17
  5. தொல்காப்பியம் கற்பியல் 5-54
  6. தொல்காப்பியம் கற்பியல் 11
  7. தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை – திருக்குறள் 43
  8. திருக்குறள் விருந்தோம்பல் அதிகாரம் 9

    1. பயிர் வளர்க்கும் வேளாண்மை போல விருந்தோம்பல் மக்களை வளர்க்கும் வேளாண்மை
    2. விருந்தினரை வைத்துக்கொண்டு தனித்துண்ணும் பழக்கம் விரும்பத் தகாதது.
    3. விருந்தினரை நாள்தோறும் பேணவேண்டும்.
    4. விருந்தினரை முக மலர்ச்சியுடன் பேணவேண்டும்.
    5. விருந்தினர் உண்டபின் எஞ்சிய உணவை உண்ணவேண்டும்.
    6. வந்த விருந்தினர் போய்விட்டால் புதிய விருந்தினர் வரவை எதிர்நோக்க வேண்டும்.
    7. விருந்தோம்பல் என்பது ஒருவகை வேள்வி
    8. இது துறவி செய்யும் வேள்வியை விட மேலானது.
    9. விருந்தோம்புதல் ஒரு செல்வம்.
    10. முகம் மலர்ந்து பேணாவிட்டால் விருந்தினர் குழைந்து போவர்.

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.