காமக்கிழத்தியர்
காமக்கிழத்தியர் என்பவர் சங்க காலச் சமூகத்தில் தலைவன், காதலால் தலைவியைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப்பட்ட பெண்கள் ஆவர் . "கிழமை" என்பது உரிமை என்ற பொருள்படும்.[1]
பரத்தையிற் பிரிவு பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2] ஆற்றிலும், குளத்திலும், காட்டிலும் தலைவன் விளையாடுதலை,[3] கிழவன் விளையாட்டு [4] என்று அது தெரிவிக்கிறது.
காமக்கிழத்தியர்,[5] ஆய்மனைக் கிழத்தி [6] என்னும் தொடர்கள் தொல்காப்பியத்தில் வருகின்றன.
காமக்கிழத்தியரின் செயல்பாடுகள் தொகுத்துக் கூறப்படுகின்றன.[7] இந்தச் செயல்பாடுகளுக்கு உரை எழுதும் இளம்பூரணர் காமக்கிழத்தியரை மூவகையினர் எனப் பகுத்துக் காட்டுகிறார்.
காமக்கிழத்தியர் வகைகள்
- ஒத்த கிழத்தி
- தலைவன், முன்பு திருமணம் செய்து கொண்ட மனையாள் மட்டுமன்றி காமம் காரணமாக தன் குலத்தைச் சேர்ந்த மற்றொருத்தியை மணந்து கொள்வான். இவளும் தலைவனுக்கு மட்டுமே உரியவள்.
- இழிந்த கிழத்தி (ஒத்த கிழத்தி)
- அடுத்தவர்களுக்கு அரசர்களால் கொடுக்கப்பட்ட அரச குலப் பெண்கள், வணிகக் குலப் பெண்கள், வேளான் குலப்பெண்கள், ஆகியோரும்
- வரையப்பட்டோர் – ஆடல் பாடல்களில் வல்லவராய்ப் பலருக்குக் காலம் கணித்துத் தந்து கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்திலிருந்து தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமைப்பெண் (கோவலனுக்கு மாதவி போன்றவள்)
- அரசர்கள், வணிகக் குலத்திலும், வேளாண் குலத்திலும் மணம் செய்து கொண்ட பெண்கள்,ஆகியோரும்
- வணிகர்கள், வேளாண் குலத்தில் மணந்து கொண்ட பெண்கள் ஆகியோரும் இழிந்த கிழத்தியர் எனப்படுவர்.
- வரையப்பட்டோர்
- செல்வந்தர்கள் கணிகையர் குலத்தில் பிறந்தவர்களை மனைவி என்ற உரிமை கொடுத்து திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வரையப்பட்டோர் ஆவர். இவர்கள் கன்னியில் வரையப்பட்டோர், அதன்பின்பு வரையப்பட்டோர் என இரு வகைப்படுவர். இவர்கள் உரிமை பூண்டமையால் "காமக் கிழத்தியர்" எனப்பட்டனர்
என காமக் கிழத்தியர் மூன்று வகைப்படுவர் என இலக்கியம் குறிப்பிடுகிறது.
- இளம்பூரணர் குறிப்பு
- ஒத்த கிழத்தியர் – மனையாளை ஒத்த (குலமுடைய) இரண்டாவது உரிமைப்பெண்
- காமக்கிழத்தியர் – தம்மினும் தாழ்ந்த குலத்தில் மணந்துகொண்ட உரிமைப்பெண்
- வரையப்பட்டோர் – ஆடல் பாடல்களில் வல்லவராய்ப் பலருக்குக் காலம் கணித்துத் தந்து கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்திலிருந்து தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமைப்பெண் (கோவலனுக்கு மாதவி போன்றவள்)
காமக்கிழத்தியரின் கூற்று [5]
- தலைவனைத் தழுவலாமா வேண்டாமா என்று புலவி கொள்ளும்போது
- தலைவன் தன் வீட்டில் தன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பணிவை இகழும்போது
- தலைவனின் மகனைக் கண்டு மகிழும்போது
- களவு, கற்பு நெறியில் வந்த மனையோள் செயல்களைப் பொறுக்க முடியாதபோது
- தலைவனுக்குத் தன் இன்பத்தில் சலிப்புத் தட்டியபோது, அவனை மனைவியிடம் அனுப்பும்போது
- அணிகலன்களுடன் வரும் தலைவனின் மகனைத் தழுவிக்கொள்ளும்போது
- மனைவி இருக்கும்போது தான் மிகை என்று கூறும்போது
- தலைவனுடன் ஆறு, குளம் போன்றவற்றில் பண்ணை விளையாடும்போது
என்று பல்வேறு சூழல்களில் காமக்கிழத்தியின் கூற்று நிகழும்.
காண்க
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
|
மேற்கோள்
அடிக்குறிப்பு
- இவர்கள் தலைவனது இளமைப்பருவத்தில் கூடி முதிர்ந்தோரும், இடைநிலைப் பருவத்தோரும், காமம் சாலா இளமையோரும் எனப் பலராவார் என்பது ஒரு கருத்து.
- தொல்காப்பியம் கற்பியல் 46
- தொல்காப்பியம் கற்பியல் 50
- தொல்காப்பியம் கற்பியல் 23
- தொல்காப்பியம் கற்பியல் 10
- தொல்காப்பியம் கற்பியல் 32
- தொல்காப்பியம் கற்பியல் 10.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.