நாட்சி ஜெர்மனி

நாஜி ஜெர்மனி அல்லது நாட்சி ஜெர்மனி (Nazi Germany) என்பது அடால்ப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி நாட்டை குறிக்க வழங்கப்படும் ஆங்கிலப்பெயராகும். ஹிட்லர் ஜெர்மனியை 1933 முதல் 1945 ஆம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது.

ஜெர்மன் பேரரசு
Großdeutsches Reich
1933–1945
கொடி தேசிய சின்னங்கள்
குறிக்கோள்
"Ein Volk, ein Reich, ein Führer."
தமிழில்: ஒரு மக்கள், ஒரு நாடு, ஒரு தலைவர்
நாட்டுப்பண்
  • "Das Lied der Deutschen"
  • "Horst-Wessel-Lied"
ஜெர்மனி அமைவிடம்
1943 வரையான நாசி ஜெர்மனி.
தலைநகரம் பேர்லின்
மொழி(கள்) ஜெர்மன் மொழி
அரசாங்கம் தனிக் கட்சி ஆட்சி, சர்வாதிகாரம்
நாட்டுத் தலைவர்
 -  1925 – 1934 Paul von Hindenburg (குடியரசுத் தலைவர்)
 - 1934 – 1945 அடோல்ஃப் ஹிட்லர் (ஃபியூரர்)
 - 1945 Karl Dönitz (குடியரசுத் தலைவர்)
முதல்வர்
 - 1933 – 1945 அடோல்ஃப் ஹிட்லர்
 - 1945 ஜோசப் கோயபல்சு
 - 1945 Lutz Graf Schwerin von Krosigk
வரலாற்றுக் காலம் போர்களுக்கு இடைப்பட்ட காலம்/இரண்டாம் உலகப் போர்
 - Machtergreifung[1] 30 சனவரி 1933
 - Gleichschaltung 27 பெப்ரவரி 1933
 - Anschluss 13 மார்ச் 1938
 - போலந்து மீதான ஆக்கிரமிப்பு 1 செப்டெம்பர் 1939
 - கலைப்பு 8 மே 1945
பரப்பளவு
 - 1937 [2] 6,33,786 km² (2,44,706 sq mi)
மக்கள்தொகை
 -  1937 est.[3] 6,93,14,000 
     அடர்த்தி 109.4 /km²  (283.3 /sq mi)
நாணயம் றைஹ்ஸ்மார்க்

முந்தையது
பின்னையது
வைமர் குடியரசு
சார் (நாடுகளின் கூட்டமைப்பு)
முதல் ஆஸ்திரியக் குடியரசு
செக்கோசிலவாக்கியக் குடியரசு (1918–1938)
Klaipėda Region
டான்சிக் விடுதலை பெற்ற நகர்
இரண்டாம் போலியக் குடியரசு
இயுப்பென்-மல்மெடி
லக்சம்பர்க்
அல்சாஸ்-லோரைன்
யூகோஸ்லாவிய இராச்சியம்
ஜேர்மனியில் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பு வலயங்கள்
கூட்டுப்படை நிர்வாகத்தின் கீழான ஆஸ்திரியா
மூன்றாம் செக்கோசிலவாக்கிய குடியரசு
மக்கள் போலியக் குடியரசு
அல்சாஸ்-லொரைன்
இயுப்பென்-மால்மெடி
லக்சம்பர்க்
கலினின்கிராட் ஒப்லாஸ்து
சார் காப்புப்பகுதி
யூகோஸ்லாவிய சோசலிச கூட்டாட்சிக் குடியரசு

ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் ஐரோப்பா முழுவதும் பதட்டம் நிலவியது. இது இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் காலத்தில் இந்நாடு மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது. நாஜி படைகள் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு நாஜிக்களின் ஆட்சி ஜெர்மனியில் முடிவுக்கு வந்தது.

வரலாறு (கண்ணோட்டம்)

இரண்டாம் உலக மகாயுத்தம்: 1939-1945

1930 ஆம் ஆண்டின் பின் சர்வாதிகாரியான ஹிட்லர் பல நாடுகளில் தாக்குதல்களை நடத்தி அந்நாடுகளை தன் வசப்படுத்தினார், அவ் வேளையில் செப்டம்பர் முதலாம் திகதி 1939 ஆம் ஆண்டு ஜெர்மன் படைகள் போலந்து நாட்டை தாக்குதல் நடத்தின, அப்பொழுதே இரண்டாம் உலக மகாயுத்தம் பல மில்லியன் பட்டாளங்களுடன் ஆரம்பமானது. ஹிட்லர் போலந்தை 59,000 படை வீரர்களைக் கொண்டு இலகுவில் கைப்பற்றினார். குறைந்த தொழில் நுட்பம் காரணமாகப் போலந்து 900,000 வரையிலான பண்த்தொகையை இழந்தது.

ஹிட்லர் மேலும் நாடுகளைக் கைப்பற்றும் நோக்கைத் தொடர்ந்தார். பிரான்சில் நடந்த போரின் போது ஹிட்லர் பிரான்சுவை கைப்பற்றினார். ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் ஐக்கிய இராச்சியத்திற்கு ஓர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பல நாடுகள் தன் வசம் இருப்பதாகவும் ஐக்கிய இராச்சியத்தையும் போரை தடுத்து நிறுத்த தம்மிடம் சரணடையும் படியும் இல்லாவிடின் அவர்கள் மீது படையெடுப்பதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார், எனினும் அக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில் மறுத்துவிட்டார், அன்றிலிருந்தே இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. ஐக்கிய இராச்சியப் போர் 1940 ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை முழுவதும் நீடித்தது. இறுதியில் யுத்தம் ஜெர்மானிய விமான படைக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. மீண்டும் சேர்மனி பின்வாங்கியது. ஹிட்லர் யுத்தத்தில் தோற்றதால் கவலையும் சீற்றமும் அடைந்தார். இன்று லண்டன் மீதான செருமனியின் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆரம்பமானது ஐக்கிய இராச்சிய விமானம் ஒன்று செருமானிய நகரம் ஒன்றைத் தாக்கியது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

ஹிட்லர் சோவியத் யூனியனை தாக்குவதற்கு ஆணையிட்டார். எனவே செருமானியப் படைகள் 1941 ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் திகதி குளிர்காலத்தில் சோவியத் யூனியனை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது ரசியக் குளிர் கடுமையாக இருந்ததால் பல படை வீரர்கள் உறைந்து விட்டனர். ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் சோவியத்துகளுடன் நடந்த போர் நடக்கும் வரை சோவியத்துகளை ஹிட்லரின் படை ஒவ்வொரு போரிலும் வென்று கொண்டே சென்றது. ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் சோவியத்துகளுடன் நடந்த போர் நடக்கும் முன் ஒவ்வொரு போரிலும் ஒரு செருமானியப் படைவீரன் இறந்தால் அதற்குச் சமனாக 5 சோவியத் யூனியன் படைவீரர்கள் இறந்தனர். எனினும் ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் நடந்த யுத்தத்தில் ஒரு சோவியடத்து வீரனுக்கு ஒரு செருமானிய வீரன் என்றே இறப்பு எண்ணிக்கை இருந்தது. ஏனெனில் அப்போது செருமானிய வீரர்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு வீரர்களின் எண்ணிக்கை கொண்ட படையை சோவியத் யூனியன் வைத்திருந்தது. செருமானியர்கள் தமது உத்வேகத்தை இழந்தனர். பல போர் வீரர்கள் இறந்ததோடு மட்டுமன்றி சிலர் காயமும் அடைந்தனர் அதன் மூலம் சோவியத்துக்களிடம் இருந்து போரிடும் முறையைக் கற்றுக்கொண்டனர். மொத்தமாக சோவியத் யூனியனோடு போர் செய்து 4 மில்லியன் போர் வீரர்கள் வரை இறந்தனர்.

அதன் பின் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, சோவியத் யூனியன் மற்றும் பல்வேறு நாடுகளும் இணைந்து செருமானியப் படைகளைத் தோற்கடித்தன. ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டதோடு யுத்தம் அதே ஆண்டு மே மாதம் எட்டாம் திகதி நிறைவுற்றது.

அரசியல்

சித்தாந்தம்

தொழிலாளர் கட்சியானது (செருமன்: Nationalsozialistische Deutsche Arbeiterpartei NSDAP), 1929 ல் பெரும் பொருளாதார மந்தநிலையுடன் ஏற்பட்ட சமூக மற்றும் நிதிய எழுச்சிகளின் போது, ​​அது ஒரு வலதுசாரி அரசியல் கட்சியாக இருந்தது. நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை(propaganda) செய்தது.

அடொல்ப் ஹிட்லர் தனது சிறைவாசத்தின் போது எழுதிய மெயின் கேம்ப் (Mein Kampf-எனது தவிப்பு என மொழியாக்கம் செய்யப்படும்.) எனும் நூலில் நாசிசக் கொள்கைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் துணை இராணுவப்படை

வேர்மாக்ட்

வேர்மாக்ட் என்பது 1935 முதல் 1945 வரையில் செயல்பட்ட ஒருங்கிணைந்த இராணுவப்படைகளைக் குறிப்பதாகும். (கியர்; German: Heer, டாய்ச்சு ஒலிப்பு: [ˈheːɐ̯]) என்பது வேர்மாக்ட்டின் தரைப்படைப் பகுதியும், 1935 முதல் இது படைக் கலைப்பு செய்யப்படும் வரை இயங்கிய, பின்னர் ஆகத்து 1946 இல் கலைக்கப்பட்ட[4] வழமையான செருமன் ஆயுதப்படையும் ஆகும். வேர்மாக்ட் கிரிக்ஸ்மரினா (கடற்படை), லூப்டுவாபே (வான்படை) ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், மொத்தமாக கிட்டத்தட்ட 18 மில்லியன் வீரர்கள் செருமன் தரைப்படையில் சேவை செய்தார்கள். அவர்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் போரினால் ஏற்பட்ட சேதத்திற்கு உள்ளானார்கள்.[5] பல வீரர்கள் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளனவர்கள்.

பொசனானிலுள்ள, போர்ட் 7 ல்,நச்சு வாயு செலுத்த பயன்படுத்தப்பட்ட இராணுவ கிடங்கு அறை எண் 17

டி 4 செயல்

டி 4 செயல்- (T4 Action- Euthanasia Program) வலியில்லா மரணம் விளைவித்தல் , நாசி ஜெர்மனியில் இந்த செயல் மூலம் 1939 முதல் 1941 வரையிலுள்ள நாசி ஜெர்மனி காலத்தில் ஜெர்மனி மருத்துவர்களால் சுமார் 70,273 மக்கள் கொல்லப்பட்டனர். ஊனமானவர்கள், மன நோயால் பாதிக்கப்பட்ட யேர்மனியர்கள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள். இவர்களை உயர்ந்த யேர்மனிய மனித இனத்துக்குப் பொருத்தல் இல்லாதவர்கள் என்பதால் கொல்லப்பட வேண்டும் என்று நாசிகள் முடிவு செய்தனர். செப்டம்பர் 1, 1939 ல் வெளியிடப்பட்ட இட்லரின் ரகசிய சுற்றறிக்கையின்படி மிகவும் கொடிய தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கபட்டவர்கள் என்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றும் காரணம் காட்டி நச்சு வாயு செலுத்திக் கொல்லப்பட்டனர். அக்டோபர் 1941 ல் சுமார் 2,75000 மக்கள் டி 4 செயல் மூலம் கொல்லப்பட்டதாக தக்க சாட்சியங்களுடன் நியுரம்பெர்க் விசாரணை ஆணையம் உறுதி செய்தது. சங்கேத வார்த்தையான டி 4 என்பது டையர் கார்ட்டன்ஸ்டார்ப் 4 (பெர்லினுடைய ஒரு வீதியின் பெயர்) என்ற வார்த்தையின் சுருக்கமே. இந்த இடத்தில் இயங்கிவரும் மருத்துவக்குழுவுக்கே அந்த ரகசிய சுற்றறிக்கை சென்றது.

பாரிய யூதப் படுகொலை (Holocaust)

மே/ஜூன் 1944 இல் ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் "தேர்வு" நடைபெறுகிறது. வலப்பக்கம் உள்ளவர்கள் அடிமை வேலைக்கும், இடப்பக்கத்தில் உள்ளவர்கள் வாயு அறைக்கும் அனுப்பப்படவுள்ளனர். இப்படம் ஹங்கேரியிலிருந்து யூதர்கள் கொண்டுவரப்படுவதைக் காட்டுகிறது. ஏர்ன்ஸ்ட் ஹாப்மன் அல்லது பேர்னாட் வால்ட்டர் பிடித்த படம்.[6]

பாரிய யூதப் படுகொலை (Holocaust) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.

1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்; இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சுத்ஸ்டாப்பெல் ஒருங்கிணைப்பின் கீழ், நாட்சி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், செருமனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் செருமனி ஆக்கிரமிப்பு ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற பெரும் படுகொலைகளை நடத்துவதில் மற்றும் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது. இந்த நிகழ்வுகள் நாட்சி செருமனிக்குள், அதன் நேச நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளிலும் நிகழ்ந்தது. பெரும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நோக்குடன் 42,500க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. பெரும் இன அழிப்பு செயலில் ஈடுபட்டவர்களாக 200,000க்கும் அதிகமான நபர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.

இந்த இன அழிப்பை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு படியாக, "யூதர்களின் கேள்விக்கு இறுதியான தீர்வு" என்று கூறப்பட்ட அழிப்புக் கொள்கையையின் படி நிகழ்ந்தது. இட்லர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, செருமானிய அரசு யூதர்கள் குடிமைச் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டங்களை நிறைவேற்றியது, அதில் குறிப்பிடத்தக்கது நியூரம்பெர்க் சட்டம் 1935. 1933 இல் தொடங்கி நாட்சிகள் வதை முகாம் வலைப்பின்னல்களை அமைக்கத் தொடங்கினர். 1939 இல் போர் தொடங்கிய பிறகு செருமானிய மற்றும் வெளிநாட்டு யூதர்கள் போர்கால முகாம்களில் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டனர். 1941 இல் செருமானி கிழக்கில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு எல்லா யூத எதிர்ப்பு செயல்களும் அதிகமாகியது. சிறப்பு துணை இராணுவப் படையினரான ஈன்சாட்சுகுரூப்பன் ஓராண்டிற்குள் 2 மில்லியன் யூதர்கள் வரை பெரும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் படுகொலை செய்தனர். 1942 இன் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சரக்கு தொடருந்துகள் மூலம் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்டனர். பயணத்தின் கொடுமையைத் தாங்கி உயிர் பிழைத்தவர்கள் புகை அரங்குகளில் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இது ஐரோப்பால் 1945 ஏப்ரல் - மேயில் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை தொடர்ந்தது.

யூத ஆயுதப் படைக் குழுக்கள் வரம்புடைய அளவில் இருந்தன. மிகக் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு 1943 இன் வார்சா முகாம் கிளர்ச்சி நிகழ்வாகும், அதில் ஆயிரக்கணக்கான குறைந்த ஆயுதங்களை கொண்ட யூத வீரர்கள் வாபன் சுத்ஸ்டாபலை கரையில் நான்கு வாரங்களுக்கு தடுத்து வைத்தனர். தோராயமாக 20,000 - 30,000 யூத பிரிவினைவாதிகள், கிழக்கு ஐரோப்பாவில் நாட்சி படைகளையும் அவர்களது கூட்டாளிகளையும் எதிர்த்து போரிட்டனர். பிரஞ்சு யூதர்கள், பிரஞ்சு எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்து நாட்சி படைகள் மற்றும் விட்சி பிரஞ்சு அதிகாரத்திற்கெதிராக கொரில்லா போர் முறையில் போரிட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய யூத கிளர்ச்சி நடந்தன.


மேற்கோள்கள்

  1. ஜெர்மன் தேர்தல், 1933
  2. Statistisches Bundesamt (Federal Statistical Office), Statistisches Jahrbuch 2006 für die Bundesrepublik Deutschland, p. 34.
  3. Germany — Country Study
  4. Large, David Clay (1996). Germans to the Front: West German Rearmament in the Adenauer Era, p. 25
  5. "Statistics and Numbers". பார்த்த நாள் 5 சூலை 2015.
  6. "The Auschwitz Album", Yad Vashem.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.