தொல்லுயிரியல்

தொல்லுயிரியல் என்பது பாறைகளில் பதிவாகியுள்ள பண்டைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தொல்லுயிர்ப் படிவங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விருத்தி பற்றி ஆராயும் துறையாகும். இது உடற் படிவங்கள், வழித்தடங்கள் (tracks), வளைகள் (burrows), கழிவுப் படிவங்கள் (fossilized feces) மற்றும் வேதியியல் எச்சங்கள் போன்றவற்றின் ஆய்வுகளையும் உள்ளடக்கும்.

புவியியலிலும், காலநிலையிலும் ஏற்பட்ட நீண்ட கால இயல்பியல் மாற்றங்கள் எவ்வாறு உயிரினங்களின் படிமலர்ச்சியைப் பாதித்தன, எவ்வாறு வாழ்சூழலியல் முறைமைகள் (ecosystems)இம்மாற்றங்களுக்கு ஏற்றவாறு செயற்பட்டு புவிச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தின, இந்தப் பரஸ்பர மாற்றங்கள் தற்கால உயிரினப்பல்வகைமையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின என்பன பற்றி ஆராய்வதன் மூலம், பண்டைக்கால உயிர்வாழ்க்கையை நவீன தொல்லுயிரியல் உரிய சூழலில் அமைத்துக்காட்டுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.