ஒட்டுண்ணியியல்

ஒட்டுண்ணியியல் (parasitology) என்பது, ஒட்டுண்ணிகள், அவற்றின் வழங்கிகள் அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆராயும் ஒரு துறை ஆகும். உயிரியல் சார்ந்த ஒரு துறையான இதன் எல்லை, குறித்த உயிரினங்களாலோ அல்லது அவற்றின் சூழலாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், அவற்றின் வாழ்க்கை முறையால் தீர்மானிக்கப்படுகின்றன. இது, பல துறைகளின் ஒரு தொகுப்பாக அமைவதுடன், ஆய்வுக்கான நுட்பங்களை கல உயிரியல், உயிர்வேதியியல், மூலக்கூற்று உயிரியல், தடுப்புத்திறனியல், மரபியல், கூர்ப்பு, சூழலியல் போன்ற துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறது.

வளர்ந்த கறுப்பு ஈயும் (சிமுலியம் யகேன்சே) அதன் உணர் கொம்பிலிருந்து வெளிப்படும் ஒன்சோசேர்க்கா வொல்வுலசு என்னும் ஒட்டுண்ணியும். ஆபிரிக்காவில் ஆற்றுக் குருடு என்னும் நோய்க்கு இவ்வொட்டுண்ணியே காரணம் ஆகும். மின்னணு நுண்ணோக்கி மூலம் 100 மடங்கு பெருப்பிக்கப்பட்டது..

துறைகள்

பல்வகைப்பட்ட உயிரினங்கள் பற்றிய ஆய்வு, பெரும்பாலும் சிறு சிறு எளிமையான ஆய்வுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை எல்லாம் ஒரே உயிரினம் பற்றி அல்லது நோய்கள் பற்றி ஆராய்வு செய்யாவைட்டாலும் பொதுவான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. ஒட்டுண்ணியியலின் பெரும்பாலான ஆய்வுகள் பின்வருவனவற்றுள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களுள் அடங்குகின்றன. பொதுவாக புரோக்கரியோட்டாக்கள் பற்றிய ஆய்வு, ஒட்டுண்ணியியலில் அன்றி, பக்டீரியாவியலிலேயே அடங்குகின்றது.

  • மருத்துவ ஒட்டுண்ணியியல்
  • கால்நடை மருத்துவ ஒட்டுண்ணியியல்
  • கணிய ஒட்டுண்ணியியல்
  • அமைப்பு ஒட்டுண்ணியியல்
  • ஒட்டுண்ணிச் சூழலியல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.