தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்

தெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் தெலுங்கானா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (தெலுங்கானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழிசை சௌந்தரராஜன் என்பவர் ஆளுநராக உள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் 
ராஜ்பவன், தெலுங்கானா,
வாழுமிடம்ராஜ்பவன், தெலுங்கானா, ஐதராபாத்து
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதல் தெலுங்கானா ஆளுநர்ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
உருவாக்கப்பட்ட ஆண்டு2 சூன் 2014 (2014-06-02)
இணைய தளம்governor.telangana.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள தெலங்கானா மாநிலம்

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

ஆளுநரின் பல வகையான அதிகாரங்கள்:

  • நிறைவேற்று அதிகாரங்கள்  நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்குதல் தொடர்பானது.
  • சட்டமன்ற அதிகாரங்கள்சட்டம் உருவாக்குதல் மற்றும் மாநில சட்டமன்றம்  தொடர்பானது.
  • விருப்புரிமை அதிகாரங்கள்  தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்பட்டவை.

  தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல்

2014 முதல் தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல்   உள்ளது. ஆளுநரின் அலுவலகமானது மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அமைந்துள்ளது.[1][2]

# பெயர் படம் அலுவலக  சேர்ந்தது அலுவலகம் முடிந்தது அலுவலக காலம் நியமித்தவர்
1 ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் 02 சூன் 2014 07 செப்டம்பர் 2019 பிரணப் முகர்ஜி
2 Dr.தமிழிசை சௌந்தரராஜன்[3] 08 செப்டம்பர் 2019 பதவியில் 0 ஆண்டுகள், 84 நாட்கள் ராம் நாத் கோவிந்த்

 மேலும் காண்க

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.