ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948 இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
ஜெகன் மோகன் ரெட்டி

30 மே 2019  முதல்
வசிப்பிடம்ஏலூரு
நியமிப்பவர்ஆந்திரப் பிரதேச ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்த. பிரகாசம்
உருவாக்கம்1 அக்டோபர் 1953
வலைத்தளம்Official website
இந்திய வரைபடத்தில் (1956-2014) வரை தெலுங்கானாவுடன் ஒருங்கிணைந்திருந்த ஆந்திர பிரதேச மாநிலம்.

ஐதராபாத் மாநில முதலமைச்சர்கள்

1948ல் ஐதராபாத் நிஜாமிடமிருந்த ஐதராபாத் மாநிலம் இந்திய அரசுடன் இணைகப்பட்டது. இதில் தெலுங்கானா பகுதியின் 9 தெலுங்கு பேசும் மாவட்டங்களும், கர்நாடகப் பகுதியின் 4 கன்னடம் பேசும் மாவட்டங்களும் தற்போதைய மகாராட்டிரப் பகுதியின் 4 மராத்தி பேசும் மாவட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி சொந்தப் பகுதி பிறந்த இடம் நாட்கள்
1 எம். கே. வெள்ளோடி 26 சனவரி 1950 6 மார்ச் 1952 இதேகா கேரளம் - 770
2 புர்குல ராமகிருஷ்ண ராவ்[1] 6 மார்ச் 1952 31 அக்டோபர் 1956 இதேகா தெலுங்கானா மகபூப்நகர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 1855

ஆந்திர மாநில முதலமைச்சர்கள்

சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அடங்கிய இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளைக் கொண்டு 1953ல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி சொந்த பகுதி பிறந்த இடம் பதவியில் இருந்த நாட்கள்
1 த. பிரகாசம்[2] 1 அக்டோபர் 1953 27 மார்ச் 1955 இதேகா கடற்கரை ஆந்திரா பிரகாசம் மாவட்டம் 631
2 பெசவாடா கோபால ரெட்டி[2] 28 மார்ச் 1955 1 நவம்பர் 1956 இதேகா கடற்கரை ஆந்திரா நெல்லூர் 584
= முதல்வரின் கட்சி- இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) = முதல்வரின் கட்சி - தெலுங்கு தேசம் கட்சி (தெ.தே) = முதல்வரின் கட்சி - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (ஒய். எஸ். ஆர்)

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்

தெலுங்கானா பிரிவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தை உயர்த்திக் காட்டும் இந்தியாவின் வரைபடம்

1956இ ல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் ஒளரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலம் அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள் ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.

# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த
இடம்
பதவியில்
இருந்த
நாட்கள்
1 நீலம் சஞ்சீவ ரெட்டி 1 நவம்பர் 1956 11 ஜனவரி 1960 இதேகா இராயலசீமை அனந்தபூர் 1167
2 தாமோதரம் சஞ்சீவய்யா 11 ஜனவரி 1960 12 மார்ச் 1962 இதேகா இராயலசீமை கர்னூல் 790
- நீலம் சஞ்சீவ ரெட்டி 12 மார்ச் 1962 20 பெப்ரவரி 1964 இதேகா இராயலசீமை அனந்தபூர் 719
3 காசு பிரம்மானந்த ரெட்டி 21 பெப்ரவரி 1964 30 செப்டம்பர் 1971 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 2777
4 பி. வி. நரசிம்ம ராவ் 30 செப்டம்பர் 1971 10 சனவரி 1973 இதேகா தெலுங்கானா கரீம்நகர் 468
குடியரசுத் தலைவர் ஆட்சி (11 சனவரி 1973 – 10 திசம்பர் 1973. காலம்: 335 நாட்கள்)[3]
5 ஜலகம் வெங்கல ராவ் 10 திசம்பர் 1973 6 மார்ச் 1978 இதேகா ஆந்திரா/தெலுங்கானா கிழக்கு கோதாவரி/கம்மம்[4] 1547
6 சென்னா ரெட்டி 6 மார்ச் 1978 11 அக்டோபர் 1980 இதேகா தெலுங்கானா ரங்க ரெட்டி மாவட்டம் 950
7 தங்குதுரி அஞ்சய்யா [5] 11 அக்டோபர் 1980 24 பெப்ரவரி 1982 இதேகா தெலுங்கானா மேதக் 501
8 பாவன வெங்க்டராமி ரெட்டி 24 பெப்ரவரி 1982 20 செப்டம்பர் 1982 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 208
9 கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி 20 செப்டம்பர் 1982 9 சனவரி 1983 இதேகா இராயலசீமை கர்னூல் 111
10 என். டி. ராமராவ் 9 சனவரி 1983 16 ஆகத்து 1984 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணர் 585
11 நாதேந்தல பாஸ்கர ராவ் 16 ஆகத்து 1984 16 செப்டம்பர் 1984 தெலுங்கு தேசம் (தனிப்பிளவு) கடற்கரை ஆந்திரா குண்டூர் 31
- என். டி. ராமராவ் 16 செப்டம்பர் 1984 2 திசம்பர் 1989 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணர் 1903
- சென்னா ரெட்டி 3 திசம்பர் 1989 17 திசம்பர் 1990 இதேகா தெலுங்கானா ரங்க ரெட்டி மாவட்டம் 379
12 நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி 17 திசம்பர் 1990 9 அக்டோபர் 1992 இதேகா கடற்கரை ஆந்திரா நெல்லூர் 662
- கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி 9 அக்டோபர் 1992 12 திசம்பர் 1994 இதேகா இராயலசீமை கர்னூல் 794
- என். டி. ராமராவ் 12 திசம்பர் 1994 1 செப்டம்பர் 1995 தெ.தே கடற்கரை ஆந்திரா கிருஷ்ணர் 263
13 சந்திரபாபு நாயுடு[6] 1 செப்டம்பர் 1995 14 மே 2004 தெ.தே இராயலசீமை சித்தூர் 3378
14 ராஜசேகர ரெட்டி 14 மே 2004 2 செப்டம்பர் 2009 [7] இதேகா இராயலசீமை கடப்பா 1938
15 கொனியேட்டி ரோசையா 03 செப்டம்பர் 2009[8] 24 நவம்பர் 2010 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 448
16 நல்லாரி கிரண் குமார் ரெட்டி 25 நவம்பர் 2010 [9] மார்ச் 1, 2014 இதேகா இராயலசீமை சித்தூர் 1193
16 குடியரசுத் தலைவர் ஆட்சி மார்ச் 1, 2014 ஜூன் 8 2014 - - - 98

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலுங்கானா பகுதி சூன் 2, 2014 அன்று அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து இராயலசீமை, கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டும் புதிய ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகளாக மாறின. இம்மாநிலம் சீமாந்திரா என்றும் குறிக்கப்படுகிறது.

# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த
இடம்
பதவியில்
இருந்த
நாட்கள்
1 சந்திரபாபு நாயுடு ஜூன் 8 2014 29 மே 2019 தெலுங்கு தேசம் இராயலசீமை சித்தூர் 1816
2 ஜெகன் மோகன் ரெட்டி 30 மே 2019 தற்போது கடமையாற்றுகிறார் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 213

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. ஐதராபாத் மாநில முதல்வர்
  2. ஆந்திர மாநில முதல்வர்
  3. President's rule was imposed because of rebellion from the state ministers against the CM – PV Narasimha Rao. The rebellion was a fallout of the Telengana agitation (Source: "Less fortunate as Chief Minister". சென்னை, இந்தியா: த இந்து. 2004-12-24. Archived from the original on 2011-01-24. http://www.hindu.com/2004/12/24/stories/2004122407531200.htm. பார்த்த நாள்: 2007-07-05.).
  4. Jalagam Vengala Rao Archived சனவரி 24, 2011 at WebCite
  5. ராமகிருஷ்ண ரெட்டி தல்லா என்றும் அறியப்படுகிறார்
  6. என்.டி. ராமராவின் மருமகன்
  7. "Andhra CM Y.S. Rajasekhara Reddy dies". Press Trust of இந்தியா (2009-09-02). பார்த்த நாள் 2009-09-02.
  8. Site Under Construction Archived சனவரி 24, 2011 at WebCite
  9. Sonia Gandhi to pick new Andhra Chief Minister Archived சனவரி 24, 2011 at WebCite

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.