ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் (Ekkadu Srinivasan Lakshmi Narasimhan) (பிறப்பு 1945) ஒரு இந்திய அரசியல்வாதியும் , திசம்பர் 2009 முதல் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராவார்[1] அதற்கு முன் 2007 முதல் 2010 வரை சத்தீசுக்கரின் ஆளுநராகவும் பதவி வகித்தார் [2]தெலுங்கானா மாநிலத்தின் ஆளுனராக சூன் 2, 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்.[3]
ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் | |
---|---|
![]() | |
தெலுங்கானா ஆளுநர் | |
பதவியில் சூன் 2, 2014 – செப்டம்பர் 7, 2019 | |
முன்னவர் | புதிதாக உருவாக்கப்பட்டது |
பின்வந்தவர் | Dr.தமிழிசை சௌந்தரராஜன் |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 27 திசம்பர் 2009 – 23 ஜூலை 2019 | |
முன்னவர் | நாராயண் தத் திவாரி |
பின்வந்தவர் | பிஸ்வபுஷண் ஹரிசந்தன் |
பதவியில் 25 சனவரி 2007 – 23 சனவரி 2010 | |
முன்னவர் | கிருஷ்ண மோகன் சேத் |
பின்வந்தவர் | சேகர் தத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1946 (அகவை 72–73) |
வாழ்க்கை துணைவர்(கள்) | விமலா நரசிம்மன் |
இளமை வாழ்வு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்மன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றவர். அரசியல் அறிவியல் மற்றும் சட்டத்தில் பட்டமேற்படிப்பு தொடர்ந்தார்.புது தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரியில் தமது கல்வியை முடித்து இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார்.[4]
பணிவாழ்வு
நரசிம்மன் ஆந்திரப் பிரதேசத்திற்கான 1968ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி கூற்றினைச் சேர்ந்தவர். 1981ஆம் ஆண்டு முதல் 1984 வரை மாசுகோ தூதரகத்தில் முதல் செயலாளராக பணி புரிந்தார். மிகவும் மதிப்பிற்குரிய அறிவுசால் அதிகாரியாக கருதப்பட்டார்.
பல ஆண்டுகள் ஒற்று அமைப்பில் பணி புரிந்து பதவி உயர்வுகள் பெற்று திசம்பர் 31, 2006 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் இயக்குநராக பணி ஓய்வு பெற்றார்.[5]
அரசியல் வாழ்வு
சனவரி 19, 2007 அன்று நரசிம்மன் சத்தீசுக்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு சனவரி 25 அன்று பதவியேற்றுக் கொண்டார்.[6] திசம்பர் 27, 2009 அன்று ஆந்திரப் பிரதேச ஆளுநர் நாராயண் தத் திவாரி பாலியல் அவதூற்றினால் பதவியிலிருந்து விலகியபோது அம்மாநில ஆளுநராக தற்காலிக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[1] சனவரி 23, 2010 முதல் ஆந்திரப் பிரதேசத்தின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டார்.[2]
தனிவாழ்வு
விமலா நரசிம்மன் இவரது மனைவியாகும்.
மேற்கோள்கள்
- "Sex sting fallout: Chhattisgarh governor gets additional charge of Andhra". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-12-27. http://timesofindia.indiatimes.com/india/Sex-sting-fallout-Chhattisgarh-governor-gets-additional-charge-of-Andhra-/articleshow/5384357.cms.
- "Shekhar Dutt sworn in as Chhattisgarh governor". New Kerala. 2010-01-23. http://www.newkerala.com/news/fullnews-37022.html.
- TRS chief KCR to be sworn-in as first CM of Telangana on Monday | The Indian Express
- "Narasimhan takes over as Andhra governor". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2009-12-28. http://www.hindustantimes.com/News-Feed/hyderabad/Narasimhan-takes-over-as-Andhra-governor/Article1-491338.aspx.
- "Narasimhan to take oath as Chhattisgarh Governor on Jan. 25", The Hindu, January 21, 2007.
- "Former IB chief Narasimhan sworn in Chhattisgarh governor". Indo Asian News Service. 2007-01-25. http://www.dailyindia.com/show/106993.php/Former-IB-chief-Narasimhan-sworn-in-Chhattisgarh-governor.
அரசு பதவிகள் | ||
---|---|---|
முன்னர் கிருஷ்ண மோகன் சேத் |
சத்தீசுக்கர் ஆளுநர் 25 சனவரி 2007 – 23 சனவரி 2010 |
பின்னர் சேகர் தத் |
முன்னர் நாராயண் தத் திவாரி |
ஆந்திரப் பிரதேசம் ஆளுநர் 2009 – நடப்பு |
பதவியில் உள்ளார் |