திருவத்திபுரம் பேருந்து நிலையம்
திருவத்திபுரம் பேருந்து நிலையம் (Tiruvathipuram Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதான பேருந்து நிலையமாகும். அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்காவது பெரிய பேருந்து நிலையமாகும். இது நகரின் மையப்பகுதியான மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.
திருவத்திபுரம் பேருந்து நிலையம் செய்யார் நகரத்தில் உள்ள பேருந்து நிலையம் | |
---|---|
நகரப் பேருந்து நிலையம் | |
இடம் | வந்தவாசி - செய்யாறு - ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை, திருவத்திபுரம் நகரம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 632101 |
அமைவு | 12.6624746°N 79.5420050°E |
உரிமம் | திருவத்திபுரம் நகராட்சி |
நடைமேடை | 3 (120 Bus) |
இருப்புப் பாதைகள் | ஆம் |
இணைப்புக்கள் | செய்யாறு மார்க்கெட் பகுதி |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அனுகல் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1] |
வரலாறு | |
மறுநிர்மாணம் | இல்லை |
மின்சாரமயம் | ஆம் |
போக்குவரத்து | |
பயணிகள் () | நாள் ஒன்றுக்கு 2,00,000 முதல் 3,00,000/வரை |
சேவைகள் | |
ஆம்
|
செய்யாறு நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு, வேலூர், தாம்பரம், சேலம் ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மேல்மருவத்தூர், சேத்துப்பட்டு, போளூர், பிரம்மதேசம், வெம்பாக்கம், திருத்தணி, திருப்பதி, உத்திரமேரூர், திண்டிவனம், புதுச்சேரி, செங்கம், பெங்களூரு,திருச்சி, ஓசூர், படவேடு ஆகிய நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பேருந்து சேவைகள் உள்ளது.