சோயா அவரை
சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அவரை இனத் தாவரம். ஆண்டுத் தாவரமான இது, சீனாவில் உணவாகவும், மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வருகின்றது. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது. சோயா பல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் சேர்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கான மாற்று உணவுப்பொருள்களும் இவற்றுள் அடங்கும்.
சோயா அவரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தொகுதி: | மக்னோலியோபைட்டா |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | ஃபேபேலெஸ் |
குடும்பம்: | பபேசியே |
துணைக்குடும்பம்: | ஃபேபோய்டீ |
பேரினம்: | கிளைசீன் |
இனம்: | கி. மக்ஸ் |
இருசொற் பெயரீடு | |
கிளைசீன் மக்ஸ் (L.) Merr. | |
நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன.
கிளைசீன் வைல்ட் (Glycine Willd) என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (G. max (L.) Merrill), காட்டுச் சோயா (G. soja Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. கிளைசீன் சோஜா சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் கிளைசீன் சோஜா குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
பெயர்
சோயா அவரைத் தாவரம் சீனாவிலே பெரிய அவரை (大豆; பின்யின்: dàdòu; ஜப்பானிய மொழி: daizu) அல்லது மஞ்சள் அவரை என அழைக்கப்படுகின்றது. (சீன மொழி: 黄豆; பின்யின்: huángdòu)
வரலாறு
சோயா அவரையானது கிழக்காசியாவில் பயிரிடப்பட்ட முக்கிய பயிர் ஆகும். இதனை வரலாற்று எழுத்து மூலாதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சோயா அவரை நீண்ட காலம் பயிரிடக்கூடியதுமான மட்டுப்படுத்தப்பட்டதுமான பயிர் ஆகும். இதன் மத்திய நிலையம் சீனா ஆகும் எனினும் இது வேறு நாடுகளுக்குப் பரப்பப்பட்டது. இன்று அமெரிகா, பிரேசில், ஆர்ஜென்டீனா, இந்தியா, சீனா, மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பிரதான பயிர்களுள் சோயா அவரையும் ஒன்றாகும்.
விளக்கம்
பெரும்பாலான மற்ற தாவரங்களைப் போல, சோயா அவரை விதையிலிருந்து முற்றிய தாவரமாக வளர தனித்துவமான பல நிலைகளை கடக்க வேண்டியுள்ளது.
முளைத்தல்
வளர்ச்சியின் முதல் நிலை விதை முளைத்தலாகும், இது முளை வேரானது விதையிலிருந்து தோன்றுவதன் மூலம் துவங்குகிறது[1]. இது வேர் வளர்ச்சியின் முதல் நிலையாகும். முதல் 48 மணி நேரத்திற்குள் உகந்த சூழலில் இது உருவாகிறது. முதல் ஒளிச்சேர்க்கை அமைப்பான வித்திலைகள் (cotyledons) கீழ்த்தண்டிலிருந்து தோன்றுகின்றன.இம்முதல் தாவர அமைப்பு மண்ணிலிருந்து வெளிவரும்.வித்திலைகள் இலைகளாகவும், முதிர்ச்சி அடையாத இளந்தாவரத்திற்கு ஊட்டமளிக்கும் பணியையும் மேற்கொள்கிறது.விதை முளைத்து முதல் 7 லிருந்து 10 நாட்கள் இளம் தாவரம் வித்திலைகள் வழியாகவே ஊட்டம் பெறுகிறது [1].
முதிர்ச்சியடைதல்
முதல் உண்மையான இலைகள் ஒரு சோடி கத்தி வடிவம் போல உருவாக்கப்படுகின்றன.அதன் பின்னர், முதிர்ந்த முனைகளில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகளை உருவாக்குகின்றன. முதிர்ந்த மூன்றுசிற்றிலைக் கூட்டிலையில் (trifoliolate) இலை ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு சிற்றிலைகள் இருக்கும், பெரும்பாலும் இடைவெளியில் 6 முதல் 15 செ.மீ (2.4-5.9 அங்குலம்) நீளமும் மற்றும் 2-7 செ.மீ. (0.79-2.76 இல்) அகலமுடையதாகவும் இருக்கும்.உகந்த சூழ்நிலை தொடரும் பட்சத்தில் தண்டின் வளர்ச்சி தொடரும். ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறை புதிய கணுக்கள் உருவாகும்.பூக்கும் முன், வேர்கள் நாளொன்றுக்கு 1.9 செமீ (0.75 அங்குலம்) வளரும்.ரைசோபியம் பாக்டீரியம் இருப்பின் மூன்றாவது கணு உருவாகும் போது வேர்களில் வேர் முண்டு அல்லது வேர் முடிச்சு உருவாகின்றன.இம்முண்டுகள் உருவாவது எட்டாவது வாரம் இணையுயிரி நோய்த்தாக்கம் ஏற்படும் வரை தொடர்கிறது.மரபியல், மண் தரம், மற்றும் அதன் செயல்திறனை பாதிக்கும் பருவநிலைகள் போன்ற காரணிகளைப் பொருத்து ஒரு சோயாஅவரை தாவரத்தின் முதிர்ச்சி அமைந்துள்ளது.மேற்கண்ட தாக்கங்களைப் பொருத்து இறுதி பண்புகள் மாறக்கூடும். இருப்பினும், முழுமையாக முதிர்ந்த சோயாபீன் தாவரத்தின் பொதுவாக உயரம் 51-127 செ.மீ. (20-50 அங்குலம்) [2]. மற்றும் 76-152 செ.மீ. (30-60 அங்குலம்) ஆழம் வரை வேர்கள் வளர்கின்றன.[3] .
பூத்தல்
பூக்கும் நிகழ்வானது பகல் பொழுதின் நீட்சியைப் பொருத்துத் தூண்டப்படுகிறது, ஒரு நாளைக்கு 12.8 மணி நேரம் பகல் பொழுது பூத்தலுக்கு அவசியமாகிறது [1] [4].இருப்பினும் இப்பண்பு மிகவும் மாறுபட்டது, பல்வேறு வகை சேயா அவரை இனங்களுக்கும் தேவைப்படும் நாள் பொழுது மாறுபடக்கூடும்.சோயா அவரையின் இலைக் கோணத்தில் வெண்மை, இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோற்றமளிக்கும் தெளிவான, சுய வளமான பூக்களை (self-fertile flowers) உருவாகின்றன. சோயா பயிரைப் பொறுத்து, பூக்கும் செயல்முறைக்குப் பின்னரும் கணு வளர்ச்சி இருக்கும். சோயா அவரையானது விதை முற்றுவதற்து முன்னரே இலைகளை உதிர்த்து விடுகின்றன [5].

விதை நேர்த்தி
சோயா அவரையின் கனியானது மூன்று முதல் ஐந்து கனிகளைக் கொண்ட கொத்தாக வளர்கிறது, ஒவ்வொரு உலர்வெடிகனிகளும் 3-8 செ.மீ. நீளமும் (1-3 அங்குலம்) கொண்டதாக உள்ளன. அவற்றுக்குள் 5-11 மிமீ விட்டம் கொண்ட இரண்டு முதல் நான்கு (அரிதாக) விதைகளை கொண்டிருக்கின்றன. சோயாஅவரையின் விதைகள் பலவிதமான அளவிலும் மேலோடு கருப்பு, பழுப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களிலும் உள்ளன [2]. மாறுபட்ட மற்றும் உறிஞ்சப்பட்ட விதை கோட்டுகள் பொதுவானவை. சோயா அவரையில் பலநிறம் (Variegated ) மற்றும் இருநிற (bicolored) விதை உறைகள் பொதுவாகக் காணப்படுகிறது.
சோயா அவரையின் மேலோடு (hull) கடினமானது, தண்ணீர் உட்புகமுடியா பண்புடையது. மேலும் உள்ளிருக்கும் வித்திலைகள் முளைக்குருத்து போன்றவை பாதிக்கப்படாத வகையில் மூடிப் பாதுகாக்கிறது. விதை உறை சேதமடைந்தால் அவ்விதையானது முளைப்பதில்லை.விதை உறையின் குழிந்த பகுதியில் சிறு கண் போன்ற வித்துத்தழும்பு (hilum) (கருப்பு, பழுப்பு, சாம்பல், மஞ்சள்,வெளிர் மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படலாம்) காணப்படுகிறது. வித்துத்தழும்பின் இறுதியில் விதையுறையில் வளர்துளை அல்லது சிறு துளை காணப்படுகிறது.இது தன் வழியே நீரானது உள்ளே செல்ல அனுமதிக்கிறது இதன் பின்னர் விதை முளைக்கிறது.குறிப்பிடத்தக்க அம்சமாக சோயா அவரையின் உலர் விதைகள் அதிகப்படியான புரதச்சத்தைக் கொண்டிருக்கின்றன.இது அதிகப்படியான நாட்கள் உயிருடன் பிழைத்திருக்க ஏதுவாக இருக்கிறது. சரியான அளவு தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் விதையானது முளைக்கத் தொடங்குகிறது.
ஊட்டச்சத்து
வேறு சில உணவுகளுடன் சோயா அவரையை ஒப்பிடல்
கீழுள்ள அட்டவணையானது சோயா அவரையையும், வேறு சில உணவுகளையும் (அந்தந்த மூல விடிவிலேயே) ஊட்டச் சத்தளவில் ஒப்பிட்டுக் காட்டுகின்றது. எப்படியிருந்தாலும், சமைக்கப்படாத சோயா அவரைகளை உண்ண இயலாது, அத்துடன் அவை சமிபாடும் அடையாது. அவை மெல்லுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும், அவற்றை உண்ண வேண்டுமெனில் சமைக்கப்பட்டோ அல்லது வேறொருவகையில் தயார் செய்யப்பட்டோ இருக்க வேண்டும்.
STAPLE: | மக்காச்சோளம் / சோளம்[A] | நெல்[B] | கோதுமை[C] | உருளைக் கிழங்கு[D] | மரவள்ளி[E] | சோயா அவரை (Green)[F] | வற்றாளை[G] | சோளம்[H] | சேனைக்கிழங்கு[Y] | வாழை[Z] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூறு (100 பகுதி ஒன்றுக்கு) | தொகை | தொகை | தொகை | தொகை | தொகை | தொகை | தொகை | தொகை | தொகை | தொகை |
நீர் (கி) | 10 | 12 | 13 | 79 | 60 | 68 | 77 | 9 | 70 | 65 |
சக்தி (கிஜூJ) | 1528 | 1528 | 1369 | 322 | 670 | 615 | 360 | 1419 | 494 | 511 |
புரதம் (கி) | 9.4 | 7.1 | 12.6 | 2.0 | 1.4 | 13.0 | 1.6 | 11.3 | 1.5 | 1.3 |
கொழுப்பு (கி) | 4.74 | 0.66 | 1.54 | 0.09 | 0.28 | 6.8 | 0.05 | 3.3 | 0.17 | 0.37 |
காபோவைதரேட்டு (கி) | 74 | 80 | 71 | 17 | 38 | 11 | 20 | 75 | 28 | 32 |
நார்ச்சத்து (கி) | 7.3 | 1.3 | 12.2 | 2.2 | 1.8 | 4.2 | 3 | 6.3 | 4.1 | 2.3 |
சீனி (கி) | 0.64 | 0.12 | 0.41 | 0.78 | 1.7 | 0 | 4.18 | 0 | 0.5 | 15 |
கல்சியம் (மிகி) | 7 | 28 | 29 | 12 | 16 | 197 | 30 | 28 | 17 | 3 |
இரும்புச்சத்து (மிகி) | 2.71 | 0.8 | 3.19 | 0.78 | 0.27 | 3.55 | 0.61 | 4.4 | 0.54 | 0.6 |
மக்னீசியம் (மிகி) | 127 | 25 | 126 | 23 | 21 | 65 | 25 | 0 | 21 | 37 |
பொசுபரசு (மிகி) | 210 | 115 | 288 | 57 | 27 | 194 | 47 | 287 | 55 | 34 |
பொற்றாசியம் (மிகி) | 287 | 115 | 363 | 421 | 271 | 620 | 337 | 350 | 816 | 499 |
சோடியம் (மிகி) | 35 | 5 | 2 | 6 | 14 | 15 | 55 | 6 | 9 | 4 |
நாகம் (மிகி) | 2.21 | 1.09 | 2.65 | 0.29 | 0.34 | 0.99 | 0.3 | 0 | 0.24 | 0.14 |
செப்பு (மிகி) | 0.31 | 0.22 | 0.43 | 0.11 | 0.10 | 0.13 | 0.15 | - | 0.18 | 0.08 |
மங்கனீசு (மிகி) | 0.49 | 1.09 | 3.99 | 0.15 | 0.38 | 0.55 | 0.26 | - | 0.40 | - |
செலெனியம் (மை.கி) | 15.5 | 15.1 | 70.7 | 0.3 | 0.7 | 1.5 | 0.6 | 0 | 0.7 | 1.5 |
உயிர்ச்சத்து சி (மிகி) | 0 | 0 | 0 | 19.7 | 20.6 | 29 | 2.4 | 0 | 17.1 | 18.4 |
தயமின் (மிகி) | 0.39 | 0.07 | 0.30 | 0.08 | 0.09 | 0.44 | 0.08 | 0.24 | 0.11 | 0.05 |
ரிபோஃபிளாவின் (மிகி) | 0.20 | 0.05 | 0.12 | 0.03 | 0.05 | 0.18 | 0.06 | 0.14 | 0.03 | 0.05 |
நியாசின் (மிகி) | 3.63 | 1.6 | 5.46 | 1.05 | 0.85 | 1.65 | 0.56 | 2.93 | 0.55 | 0.69 |
பான்டோதெனிக் அமிலம் (மிகி) | 0.42 | 1.01 | 0.95 | 0.30 | 0.11 | 0.15 | 0.80 | - | 0.31 | 0.26 |
விற்றமின் b6 (மிகி) | 0.62 | 0.16 | 0.3 | 0.30 | 0.09 | 0.07 | 0.21 | - | 0.29 | 0.30 |
இலைக்காடி மொத்தம் (மை.கி) | 19 | 8 | 38 | 16 | 27 | 165 | 11 | 0 | 23 | 22 |
உயிர்ச்சத்து ஏ (ப.அ) | 214 | 0 | 9 | 2 | 13 | 180 | 14187 | 0 | 138 | 1127 |
உயிர்ச்சத்து ஈ, ஆல்பா கரோட்டின் (மிகி) | 0.49 | 0.11 | 1.01 | 0.01 | 0.19 | 0 | 0.26 | 0 | 0.39 | 0.14 |
விற்றமின் கே1 (மை.கி) | 0.3 | 0.1 | 1.9 | 1.9 | 1.9 | 0 | 1.8 | 0 | 2.6 | 0.7 |
பீட்டா கரோட்டீன் (மை.கி) | 97 | 0 | 5 | 1 | 8 | 0 | 8509 | 0 | 83 | 457 |
லுடீன்+ஸீக்ஸாக்தைன் (மை.கி) | 1355 | 0 | 220 | 8 | 0 | 0 | 0 | 0 | 0 | 30 |
நிறைவுற்ற கொழுப்பு (கி) | 0.67 | 0.18 | 0.26 | 0.03 | 0.07 | 0.79 | 0.02 | 0.46 | 0.04 | 0.14 |
ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் (கி) | 1.25 | 0.21 | 0.2 | 0.00 | 0.08 | 1.28 | 0.00 | 0.99 | 0.01 | 0.03 |
பல்நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் (கி) | 2.16 | 0.18 | 0.63 | 0.04 | 0.05 | 3.20 | 0.01 | 1.37 | 0.08 | 0.07 |
A மஞ்சள் நிறச் மக்காச்சோளம் | B சமைக்கப்படாத வெள்ளை நிற, நீளமான, செறிவூட்டாத நெல் (தானியம்) | ||||||||
C கோதுமை | D சமைக்கப்படாத உருளைக்கிழங்கு (சதை மற்றும் தோலுடன்) | ||||||||
E சமைக்கப்படாத மரவள்ளி | F சமைக்கப்படாத, பச்சை நிறமுள்ள சோயா அவரை | ||||||||
G சமைக்கப்படாத வற்றாளை | H சமைக்கப்படாத சோளம் | ||||||||
Y சமைக்கப்படாத சேனைக்கிழங்கு | Z சமைக்கப்படாத வாழை |
படத்தொகுப்பு
- சென்னையில் கிடைக்கும் வறுத்த சோயாப்பயறு
- சோயா அல்வாக்கறி
- சோயா வெண்ணெய்
- மேலை நாடுகளில் கிடைக்கும் சோயாப்பயறு
மேற்கோள்கள்
- Purcell, Larry C.; Salmeron, Montserrat; Ashlock, Lanny (2014). "Chapter 2". Arkansas Soybean Production Handbook - MP197. Little Rock, AR: University of Arkansas Cooperative Extension Service. பக். 1–8. http://www.uaex.edu/publications/pdf/mp197/chapter2.pdf. பார்த்த நாள்: 21 February 2016.
- Purcell, Larry C.; Salmeron, Montserrat; Ashlock, Lanny (2000). "Chapter 19: Soybean Facts". Arkansas Soybean Production Handbook - MP197. Little Rock, AR: University of Arkansas Cooperative Extension Service. பக். 1. http://www.uaex.edu/publications/pdf/mp197/chapter19.pdf. பார்த்த நாள்: 5 September 2016.
- Bennett, J. Michael; Rhetoric, Emeritus; Hicks, Dale R.; Naeve, Seth L.; Bennett, Nancy Bush (2014). The Minnesota Soybean Field Book. St Paul, MN: University of Minnesota Extension. பக். 33. http://www.extension.umn.edu/agriculture/soybean/docs/minnesota-soybean-field-book.pdf. பார்த்த நாள்: 16 September 2016.
- Shurtleff, William; Aoyagi, Akiko (2015). History of Soybeans and Soyfoods in Sweden, Norway, Denmark and Finland (1735-2015): Extensively Annotated Bibliography and Sourcebook. Lafayette, CA: Soyinfo Center. பக். 490. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781928914808. https://books.google.com/books?id=0gtpCgAAQBAJ&pg=PA490#v=onepage&q&f=false.
- name=MP197Chapter2
- "Nutrient data laboratory". United States Department of Agriculture. பார்த்த நாள் January 2012.