ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு

ஒற்றைநிறைவுறா கொழுப்பு (monounsaturated fat) அல்லது ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA; MonoUnsaturated Fatty Acid) என்பவை கொழுப்பு அமிலத் தொடரியில் ஒரேயொரு இரட்டைப் பிணைப்பினையும், மீதமுள்ள அனைத்து கார்பன் அணுக்களிலும் ஒற்றைப்பிணைப்பினையும் கொண்டிருக்கும் கொழுப்பு அமிலமாகும். ஆனால், பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாகும்.

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

கொழுப்பு அமிலங்கள் ஒரு முனையில் ஆல்க்கைல் தொகுதியும், மறு நுனியில் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியினையும் கொண்ட நீள்தொடரி மூலக்கூறுகளாகும். இரட்டைப் பிணைப்புகளின் எண்ணிக்கை குறையக்குறைய கொழுப்பு அமிலங்களின் கூழ்மத்தன்மை (பாகுநிலை), கனபரிமாணம் (தடிமன்), உருகுநிலை ஆகியவை அதிகரிக்கும். எனவே, ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள், பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் காட்டிலும் (அதிக இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டவை) அதிகமான உருகுநிலையையும், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைக் காட்டிலும் (இரட்டைப் பிணைப்புகள் இல்லாதவை) குறைந்த உருகுநிலையையும் கொண்டவையாகும். ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அறைவெப்பநிலையில் திரவமாகவும், உறைபதனேற்றிய நிலையில் திண்மமாகவோ அல்லது அரைத் திண்மநிலையிலோ இருக்கும். ஒலெயிக் அமிலம் (18:1 n9) ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலத்திற்கு ஒரு உதாரணமாகும்.

(ஒலெயிக் அமிலத்தின் அடிப்படை வாய்ப்பாடு)

(ஒலெயிக் அமிலத்தின் வெளிநிரப்பு கட்டமைப்பு)

பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள்

மேற்கோள்கள்

  1. .nutritiondata.com --> Oil, vegetable, sunflower Retrieved on September 27, 2010
  2. .nutritiondata.com --> Egg, yolk, raw, fresh Retrieved on August 24, 2009
  3. Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids Northwestern University. Retrieved on August 24, 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.