பல்நிறைவுறாக் கொழுப்பு

பல்நிறைவுறா கொழுப்பு (polyunsaturated fat) என்னும் கொழுப்பு அமில மூலக்கூறுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட கார்பன்-கார்பன் இரட்டைப்பிணைப்புகள் காணப்படுகின்றன[1]. அதாவது, இத்தகு மூலக்கூறுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அதன் வடிவமானது தற்போதைய கட்டமைப்பில் இல்லாத ஹைட்ரசன் அணுக்களை உள்வாங்கும் தன்மையினைக் கொண்டுள்ளது. பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதன் மூலக்கூறுகளில் உள்ள இரட்டைப்பிணைப்பின் வடிவியலைப் பொருத்து ஒருபக்க அல்லது மாறுபக்கத் தோற்றத்தினைக் கொண்டிருக்கும்.

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

இத்தகு மூலக்கூறுகளில் உள்ள மிகையான ஹைட்ரசன் அணுக்களின் பற்றாக்குறையினால் சேர்மங்களின் மூலக்கூற்றிடை அழுத்தங்களின் வலுவானது குறைந்து சேர்மங்களின் உருகுநிலையைக் குறிப்பிடத்தக்க அளவுத் தாழ்த்துகிறது. இப்பண்பை தாழ்ந்த வெப்பநிலைகளில் திரவமாகக் காணப்படும் பெரும்பாலான நிறைவுறா தாவர எண்ணெய்களை, அறைவெப்பநிலையில் திண்மமாக உள்ள நிறைவுற்ற கொழுப்புகளான பன்றிக் கொழுப்பு அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். பல தன்மைகளில் ஒருபக்க கொழுப்புகளைப் போலல்லாது, மாறுபக்க கொழுப்புகள் நிறைவுற்ற கொழுப்புகளைப்போல் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒருபக்க கொழுப்புகளைக் காட்டிலும் மாறுபக்க கொழுப்புகள் தாழ்வெப்பநிலையில் திண்மமாகின்றன.

பல்நிறைவுறா கொழுப்பான லினோலெயிக் அமிலத்தின் வேதிவடிவம்

உணவு மூலங்கள்

பல்நிறைவுறா கொழுப்பு பெரும்பாலும் கொட்டைகள், விதைகள், மீன்கள், பாசிகள், இலைவகைக் காய்கறிகள் மற்றும் துருவப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படும் இறால் போன்ற கணுக்காலிகளின் கூனிப்பொடிகள் ஆகியவற்றில் உள்ளது. பதப்படுத்தும்போதும், சூடுபடுத்தும்போதும் பல்நிறைவுறா கொழுப்புகள் அழிக்கப்படும் சாத்தியம் உள்ளதால் முழு உணவு மூலங்களை உண்பதே எப்பொழுதும் சாலச்சிறந்ததாகும்.

உடல்நலம்

பயன்கள்

பாசிகள், மீன் எண்ணெய், மீன் மற்றும் கடல் உணவுகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பிற்கான இடரினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது[2]. அதேபோல், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் குசம்பப்பூ எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதயகுழலிய நோய்க்கான இடரினைக் குறைக்கலாமெனக் கண்டறியப்பட்டுள்ளது[3].

பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள்

மேற்கோள்கள்

  1. Ordman, R. (2011). "Introduction to fats. Unpublished manuscript". Beloit, WI: Biochemistry Program, Beloit College.
  2. National Institute of Health (August 1, 2005). "Omega-3 fatty acids, fish oil, alpha-linolenic acid". மூல முகவரியிலிருந்து 3 May 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 March 2006.
  3. Willett, Walter C (September 2007). "The role of dietary n-6 fatty acids in the prevention of cardiovascular disease". Journal of Cardiovascular Medicine 8: S42–5. doi:10.2459/01.JCM.0000289275.72556.13. பப்மெட்:17876199.
  4. .nutritiondata.com --> Oil, vegetable, sunflower Retrieved on September 27, 2010
  5. .nutritiondata.com --> Egg, yolk, raw, fresh Retrieved on August 24, 2009
  6. Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids Northwestern University. Retrieved on August 24, 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.