செங்குந்தர் பிரபந்தத் திரட்டு
செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, வண்ணக்களஞ்சியம் பாடிய காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் 1926-ம் ஆண்டு வெளியிட்ட நூல் ஆகும். இந்நூல் ஈட்டியெழுபது, எழுப்பெழுபது, களிப்பொருபது, புகழேந்தியார் பாடிய திருக்கை வழக்கம், செங்குந்தர் பிள்ளைத்தமிழ், கலித்துறையந்தாதி, தசாங்கம், ஊசல், அனுபந்தம் முதலிய செங்குந்த மரபினரைப் பற்றிய நூல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும் (Castes and Tribes of Southern India) என்ற பெருநூலிற்கு நிகராக எழுதப்பட்டதாகும்.[1]
செங்குந்தர் பிரபந்தத் திரட்டு முதற்பக்கம் | |
நூலாசிரியர் | காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | சமய நூல்களின் தொகுப்பு |
வெளியீட்டாளர் | கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் மன்றம், காஞ்சிபுரம் |
வெளியிடப்பட்ட திகதி | 1926 மற்றும் 1993 |
பக்கங்கள் | 32+96+496+4 = 628 |
நூல் குறிப்பு
1926-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில், பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல்களின் தொகுப்பு. செங்குந்தர் பிரபந்தத் திரட்டில் கீழ்காணும் நூல்களும், அதனுடைய விளக்கவுரையும் அமையப் பெற்று இருக்கிறது.
நூல் | ஆசிரியர் | குறிப்புகள் |
ஈட்டியெழுபது | ஒட்டக்கூத்தர் | |
எழுப்பெழுபது | ஒட்டக்கூத்தர் | |
களிப்பொருபது | பலர் | மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது |
திருக்கை வழக்கம் | புகழேந்தி (சோழர் காலப் புலவர்) | கலியுக வருடம் 4900-ல் எழுதப்பட்டது |
செங்குந்தர் பிள்ளைத்தமிழ் | சிறீ ஞானப்பிரகாச முனிவர் | |
கலித்துறையந்தாதி | நாகை முத்துக்குமார தேசிகர் | |
தசாங்கம் | சத்திய சந்தர் | |
ஊசல் | மயிலை நாதர் | |
செங்குந்தர் விநாயக மாலை | சிறீ படம்பக்கநாதன் | |
செங்குந்த சிலாக்கியர் மாலை | காஞ்சி வீரபத்திர தேசிகர் | |
செங்குந்தர் வேற்பதிகம் | குமாரசாமி முதலியார் | |
செங்குந்தர் மரபு விளக்கம் | மாகறல் கார்த்திகேய முதலியார் | |
சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி | நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் | |
செங்குந்த வேலவர் திருக்கை வழக்கத்தந்தாதி | ஆறுமுகப் பாவலர் | |
செங்குந்தர் குலமாட்சி | திருவாரூர் வள்ளல் திரு.தி.க.ச. சபாபதி முதலியார் |
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
குறிப்புகளும் மேற்கோள்களும்
- டி. என். சிங்காரவேலு (முன்னாள் சென்னை உயர்நீதமன்ற நீதிபதி) (1993). அணிந்துரை - செங்குந்தர் பிரபந்தத் திரட்டு.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.