மாகறல் கார்த்திகேய முதலியார்
மாகறல் கார்த்திகேய முதலியார் (1857 -1916 ) தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் கவிஞர் ஆவார். தமிழ்நாடு மதுராந்தகம் அருகில் பிறந்த இவர், மொழி நூல், தமிழ்ச் சொல் விளக்கம், வேளிர் வரலாறு மாண்பு, ஆத்திசூடி முதல் விருத்தியுரை போன்ற நூல்களை எழுதினார். மாகறல் கார்த்திகேய முதலியார் மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் தமிழ் மொழி பற்றிய கட்டுரைகளை எழுதினார். தமிழ் மொழியிலிருந்து பஞ்ச திராவிடம், பாலி, காண்டி ஆகிய மொழிகள் தோன்றின என்பதை தமது ஆராய்ச்சிகளாக வெளிப் படுத்தினார். வேர்ச் சொல் ஆய்விலும் இவர் சிறந்தவராக இருந்தார்.
சான்று
K. Kalyanasundaram. "Bibliography of Tamil books published during 1901 -1920". K. Kalyanasundaram. Retrieved 2012-02-15.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.