சூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்
சூரியக் கடவுள் சமாசின் கற்பலகை (Tablet of Shamash) பண்டைய மெசொப்பொத்தேமியாவின், தற்கால தெற்கு ஈராக்கின் பண்டைய சிப்பர் நகரத்தின் தொல்லியல் களத்தை கிபி 1878 மற்றும் 1883-ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த போது பாபிலோனியர்களின் சூரியக் கடவுளான சமாசிற்கு அர்பணிக்கப்பட்ட சிற்பத்தூண் கண்டெடுக்கப்பட்டது.
![]() சூரியக் கடவுள் சமாசின் கற்பலகை | |
செய்பொருள் | சுண்ணாம்புக் கல் |
---|---|
அளவு | உயரம்: 29.2 செமீ, அகலம்: 17.8 செமீ |
உருவாக்கம் | கிமு 888 - 855 |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன். அறை எண் 55. |
பதிவு | ME 91000 |
சூரியக் கடவுள் சமாஷிற்கு முன்னர் சந்திரன் மற்றும் நட்சத்திரத் தேவதைகளுடன் கூடிய இச்சிற்பம், தற்போது பிரித்தானிய அருஙகாட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகையில் செமிடிக் மொழியில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் காலம், பாபிலோனிய மன்னர் நபு-அப்லா-இத்தினாவின் ஆட்சிக் காலம் (கிமு 888 - 855) என கணிக்கப்பட்டுள்ளது. [1]

சூரியக் கடவுள் சமாசின் கற்பலகை வைக்கப்பட்டிருந்த கற்பெட்டி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- British Museum. Dept. of Western Asiatic Antiquities; Richard David Barnett; Donald John Wiseman (1969). Fifty masterpieces of ancient Near Eastern art in the Department of Western Asiatic Antiquities, the British Museum. British Museum. பக். 41. https://books.google.com/books?id=EsoMAQAAIAAJ. பார்த்த நாள்: 9 April 2011.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.