கோடீஸ்வரி
கோடீஸ்வரி என்பது 23 திசம்பர் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2] ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மறு வடிவமாகும்.
கோடீஸ்வரி | |
---|---|
![]() | |
வகை | ஆட்ட நிகழ்ச்சி |
வழங்குநர் | ராதிகா சரத்குமார் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 23 திசம்பர் 2019 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
காலவரிசை | |
தொடர்பு | நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி உங்களில் யார் மகா இலட்சாதிபதி |
இந்த நிகழ்ச்சியின் நிகழ்ச்சியின் சிறப்பு ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள பிரத்யேக விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தொகுத்து வழங்குகின்றார்.[3][4][5]
தேர்வு
அக்டோபர் 28 தேதி முதல் தினமும் 8 மணிக்குத் தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். 8 கேள்விகளில் எதாவது ஒரு கேள்விக்குப் பதில் சொல்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.
விதி முறைத்தாள்
இந்த விளையாட்டில் மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கேட்ப ₹1000 ரூபா முதல் ₹1 கோடி ரூபா வரை வெல்வதற்கான வாய்ப்பு உண்டு.
- 4 உதவும் விதிகள்
- 50-50
- பார்வையாளர்களின் கருத்து கணிப்பு
- நிபுணரிடம் கேள்வி (தொலைபேசி அழைப்பு)
- வேறு கேள்வி
வாழ்த்து
கோடீஸ்வரி நிகழ்ச்சியை பாராட்டி பாலிவுட் நடிகர் மற்றும் கோன் பனேங்கா கரோர்பதி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அமிதாப் பச்சன் என்பவர் நிகழ்ச்சியை வாழ்த்தி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.[6]
தொடர்புடைய நிகழ்ச்சிகள்
- கோடிஸ்வரன்
- இந்த நிகழ்ச்சியை தமிழில் முதல் முறையாக நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தயாரித்தார். தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமார் என்பவர் தொகுத்து வழங்கினார். இது சன் தொலைக்காட்சியில் 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒளிபரப்பானது.
- உங்களில் யார் மகா இலட்சாதிபதி
- இந்த நிகழ்ச்சி மே 2011ஆம் ஆண்டு இலங்கை தமிழ் தொலைக்காட்ச்சியான சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் பருவத்தை அபர்ணா சுதன் என்பவர் வழங்கினார். இரண்டாவது பருவமானது மே 12, 2012ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பாலேந்திரன் காண்டீபன் தொகுத்து நடத்தினார்.
- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
- இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை நடிகர் சூர்யா, இரண்டாவது பகுதியை நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் மூன்றாவது பகுதியை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி பெப்ரவரி 7, 2012 முதல் 19 நவம்பர் 2016 வரை மூன்று பருவங்ககளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது.
ஆதாரங்கள்
- "COLORS Tamil to host Kodeeswari, an all-women game show" (en). www.exchange4media.com.
- "‘Kodeeswari’ to premiere on December 23" (en). timesofindia.indiatimes.com.
- "கோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா!" (ta). www.exchange4media.com.
- "Colors Tamil ropes in Radikaa Sarathkumar as the host of Kodeeswari" (en). www.exchange4media.com.
- "Colors Tamil ropes in mega star Radikaa Sarathkumar as the Host & Presenter of Kodeeswari" (en). www.televisionpost.com.
- "Amitabh Bachchan wishes Radhika Sarathkumar" (en). www.skytamil.net.
வெளி இணைப்புகள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 8 மணிக்கு | ||
---|---|---|
Previous program | கோடீஸ்வரி (23 டிசம்பர் 2019 - ஒளிபரப்பில்) |
Next program |
சிவகாமி (20 பெப்ரவரி 2018 – 21 டிசம்பர் 2019) |
- |