நாகினி
நாகினி என்பது ஒரு இந்தி-தமிழ் மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இது இந்தியில் நாகின் என்று பெயர் பெற்றது.இதன் 3ம் பகுதி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்தது.
நாகினி | |
---|---|
![]() season 3 | |
வகை | திகில் கற்பனை காதல் நாடகம் |
எழுத்து | கதை
திரைக்கதை
வசனம் ரேகா மோடி |
இயக்கம் |
|
படைப்பாக்கம் | தனுஸ்ரி தாஸ்குப்தா |
முகப்பிசை | Naagini Lyrical theme |
நாடு | இந்தியாஇலங்கை |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 4 |
இயல்கள் | 460 |
தயாரிப்பு | |
தயாரிப்பு |
|
நிகழ்விடங்கள் | மும்பை, மகாராஷ்ட்ரா |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சூர்யவன்ஷி, சர்ஃபராஸ், அஜய் |
ஓட்டம் | 15 -20 நிமிடங்கள் (நாகினி 1) 40-48 நிமிடங்கள் (நாகினி 2) 21-23 நிமிடங்கள் (நாகினி 3) |
தயாரிப்பு நிறுவனங்கள் |
பாலாஜி டெலிபிலிம்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 27 சூன் 2016 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
பகுதி 1/season 1சன் தொலைக்காட்சியில் ஜூன் 27, 2016 முதல் ஜனவரி 21 2017 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி 178 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இதில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இதன் மறு ஒளிபரப்பு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி யின் சோதனை ஓட்ட தொலைக்காட்சி யான NXT தொலைக்காட்சி மற்றும் HDயில் ZAP தொலைக்காட்சி பிப்ரவரி 01, 2018 முதல் பிப்ரவரி 17, 2018 வரை ஒளிபரப்பு செய்தது. ஒரே நாளில் நான்கு பகுதிகள் ஒளிப்பரப்பப்பட்டன.[1] நாகினி தொடரை கலர்ஸ்-தமிழ் நிர்வாகம் மக்களின் விருப்பத்திற்காக மீண்டும் ஒளிபரப்பாகிறது.
இந்தத் தொடர் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் நவம்பர் 18ஆம் தேதி முதல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒலிபரப்பாகி வருகிறது ..( season 1) (அத்தியாயம் 1)
பகுதி 2/Season 2 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 20, 2018 அன்று தொடங்கியது. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பப்பட்டு 76 அத்தியாயங்களுடன் ஜுன் 5, 2018 ஆம் நாளன்று நிறைவு பெற்றது. இதில் மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
[2] பகுதி 3/Season 3 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜுன் 18, 2018 அன்று தொடங்கி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு ஜூன் 07, 2019 அன்று முடிவடைந்தது.[3] இதில் அனிதா ஹசனந்தனி, சுரபி ஜோதி, பியர்ல் V பூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் 'நீயா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. மேலும் இத்தொடரில் இந்திப்பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை இரண்டாம் பருவம் சக்தி தொலைக்காட்சியில் 'நீயா-2' என்ற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கதைச்சுருக்கம்
பருவம் 1
ஷிவன்யா மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஸ்ரேயா (ஷேஷா) ஆகிய இருவரும் நினைத்த உருவிற்கு மாறும் இச்சாதாரி நாகங்கள் ஆவர். சக்தி வாய்ந்த நாகமணியை அடைய ஷிவன்யாவின் பெற்றோரை ஐந்து பேர் சேர்ந்து கொன்றுவிடுகின்றனர். மேலும் ஹரீஷ், விவேக், கைலாஷ் ஆகிய மூன்று நபர்களை மட்டுமே ஷிவன்யா தன் தாயின் கண்களில் காண முடிந்தது. அந்த ஐந்து கொலைகாரர்களையும் பழிவாங்குவதற்காக ஷிவன்யா ஹரீஷின் வீட்டிற்குள் வேலைக்காரியாக நுழைகிறார்.
ஹரீஷ்-யமுனா (யாமினி) தம்பதியரின் மகனான கார்த்திக் (ரித்திக்) ஷிவன்யாவின் மீது காதல் கொள்கிறார். ஷிவன்யா பழி வாங்க ஹரீஷின் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதால் கார்த்திக்கைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் அவர் கார்த்திக்கைக் காதலிக்க ஆரம்பித்தார்.
ஷிவன்யா முதலில் விவேக்கைக் கொன்றார். பிறகு ஷிவன்யா, ஷ்ரேயா மூலம் நான்காவது கொலைகாரர்; ஹரீஷின் நண்பர் சூர்யா என்பதை அறிந்தார். பிறகு ஸ்ரேயாவுடன் சேர்ந்து சூர்யாவைக் கொன்றார். பிறகு ருத்ரம்மாவின் மாய கத்தியால் ஷிவன்யா தன் நாக ரூபத்தில் இருக்கும் போது கார்த்திக்கால் குத்தப்பட்டு தன் சக்திகளை இழந்துவிடுவால், பின் கிருஷ்ண பூஜையின் பலனாக மீண்டும் அதீத சக்திகளைப் பெற்றார். அப்போது அவர் கைலாஷைக் கொன்றார். பிறகு யமுனா ஐந்தாவது கொலைகாரர் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் அவர் கார்த்திக்கின் உண்மையான தந்தையாகிய சிவசங்கரனின் சகோதரி ஆவார்.
ஸ்ரேயா தன்னையறியாமல் கார்த்திக்கை விரும்ப ஆரம்பிக்கிறார். ஆனால் அது தவறு என்று உணர்ந்த அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறார். இதை அறிந்த யமுனா, அவரை ஷிவன்யாவிற்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். இதனால் ஸ்ரேயா ஷிவன்யாவின் எதிரியாக மாறுகிறார்.
ஷிவன்யா ஹரீஷைக் கொல்லும் போது கார்த்திக் பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷிவன்யாவை வெறுக்கத் தொடங்கினார். யமுனாவின் உண்மை முகத்தை அறிந்த பிறகு கார்த்திக், ஷிவன்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து தங்கள் எதிரிகளிடம் இருந்து நாகமணியை மீட்கின்றனர்.
மகிழ்மதியைச் சேர்ந்தவர்கள், ஸ்ரேயாவை சுவற்றில் அடைத்து வைத்தனர். ஷிவன்யா காளியாக அருளால் யமுனாவைக் கொன்று தன் பழியைத் தீர்க்கிறார். இவ்வாறு முதல் பருவம் நிறைவடைகிறது.
பருவம் 2
மூன்று மாதங்களுக்குப் பிறகு கார்த்திக்-ஷிவன்யா தம்பதியருக்கு ஷிவானி (ஷிவாங்கி) என்ற மகள் பிறக்கிறார். பிறகு கார்த்திக் (ரித்திக்) இறந்து விடுகிறார். 25 வருடங்கள் சென்றன. ஒருவேளை தன் மகளும் ஒரு இச்சாதாரி நாகமாக மாறி துன்பப்படுவாளோ என்று ஷிவன்யா பயப்படுகிறார். ஆகவே ஷிவானியின் காதலன் ராக்கியுடனேயே அவரை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் ராக்கியின் பெரியம்மா யமுனா (யாமினி) என்பதை ஷிவன்யா அறியவில்லை.
திருமண நாளன்று யமுனா, ஸ்ரேயா (ஷேஷா), அவந்திகா, கபாலிகா, மானவ், அமர், விக்ரம் மற்றும் ராக்கியின் மண உடையில் இருந்த எட்டாவது கொலைகாரன் ஆகியோர் ஷிவன்யாவைக் கொல்கின்றனர். இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. ஷிவானி அந்த 8 கொலைகாரர்களைப் பழிவாங்க இச்சாதாரி நாகமாக மாறுகிறார். அவருக்கு உதவ ருத்ரன் என்னும் இச்சாதாரி நாகம் வருகிறார். அமர், விக்ரம், கபாலிகா மற்றும் மானவ் ஆகியோரை ஷிவானி கொன்று விட்டார். பிறகு ராக்கி எட்டாவது கொலைகாரன் இல்லை என்பதை ஷிவானி அறிகிறார்.
பிறகு அவந்திகா ருத்ராவைக் கொன்று விடுகிறார். ஷிவானி, அவந்திகாவின் சாவின் ரகசியத்தை அறிந்து அவரைக் கொல்கிறார். பிறகு எட்டாவது கொலைகாரர் நிதி என்பதை அறிந்த ஷிவானி அவரையும் கொல்கிறார். பிறகு தக்ஷிகாவின் தலையைக் கொண்டு ஸ்ரேயாவை சிலையாக மாற்றி விடுகிறார். பிறகு யமுனாவையும் கொன்று விடுகிறார். அப்போது அதை நேரில் கண்டறிந்த ராக்கி அதிர்ச்சி அடைந்தார். அன்று முதல் அவர் ஷிவானியை வெறுக்கத் தொடங்கினார். ஒரு சாமியார் கொடுத்த மருந்தால் யமுனா உயிர் பிழைத்தார்.
பிறகு ராக்கி தக்ஷக் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இச்சாதாரி நாகம் என்று தெரிய வருகிறது. அவன் அந்த வம்சத்தின் ராஜாவாகவும் இருந்தான். இதனால் அவரது கை பட்டவுடன் சிலையாாக இருந்த ஸ்ரேயா உயிர் பெற்றார். பிறகு ஸ்ரேயா, தக்ஷிகாவைக் கொன்றுவிட்டு தக்ஷக் நாகராணியாக மாறினார். யமுனா, ராக்கியின் தந்தை மற்றும் அவரின் நண்பர்கள் ஆகியோர் கார்த்திக்கைக் கொன்றவர்கள் என்று அறிந்த பிறகு ஷிவானி அவர்களையும் பழிவாங்க முடிவெடுக்கிறார்.
பிறகு ராக்கி, ஷிவானியுடன் சேர்ந்து கொலைகாரர்களைப் பழிவாங்க உதவினார். ஆனால் இது ஸ்ரேயாவிற்குத் தெரியவில்லை. ராக்கியும் ஸ்ரேயாவின் பக்கம் இருப்பது போலவே நடித்து வந்தார். பிறகு ராக்கி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்ரேயா தவிர மற்ற கொலைகாரர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இறுதியில் அவர்கள் அர்த்தநாரீசுவர உருவம் கொண்டு ஸ்ரேயாவையும் முழுவதுமாக அழித்து விட்டனர். பிறகு ராக்கி, எதிர்பாராத விதமாக திரிசூலத்தால் ஷிவானியைக் கொல்கிறார். அதன் காரணம் தெரியவில்லை. இவ்வாறு அதிர்ச்சிகரமான இறுதிக்காட்சியுடன் இரண்டாம் பருவம் நிறைவடைகிறது.
பருவம் 3
ஷிவானி தன் கொலைக்கான காரணத்தை அறிய மீண்டும் வருவேன் என்று கூறி உயிர்த் துறக்கிறார்.
பிறகு, ருஹி என்ற நாகினியின் கதை தொடர்கிறது. தன் காதலன் விக்ராந்தை கொன்ற சில இளைஞர்களைப் பழிவாங்க மீனா என்ற பெண்ணாக உருமாறி தன் தோழி விஷாகா உதவியுடன் "சேகர்" குடும்பத்தில் நுழைகிறாள்.ஆனால் இந்த இளைஞர்களில் கொலையில் சம்பந்தப்படாதவர்களும் உள்ளனர். அதில் மாஹிர், புல்டு, பிரத்தம் மற்றும் அனு ஆகியோர் அடங்குவர்.மீனா யுவராஜை மணந்து சேகர் குடும்பத்துக்குள் நுழைய திட்டம் தீட்டியிருந்தாள். ஆனால் விஷாகா யுவராஜ்ஜை கொல்ல, மீனா மாஹிரை மணந்து கொள்கிறார். பிறகு அவர் விஷாகாவின் உதவியுடன் யுவராஜ், தக்ஷ், ரேகான் ஆகியோரைக் கொன்றார். கரன் தற்போது கோமாவில் உள்ளார். மீனாவின் தாயார் நாகராணியை கொன்றது யார் என்ற கேள்வி எழுகிறது, ஆனால், தன் தாயார் உயிருடன் இருப்பது மீனாவிற்கு தெரியவில்லை. நாகமணியை அடைய விக்ராந்தும், அவனது தாயாரும் ஆதியும் ஒன்று சேர்ந்து மீனாவை ஏமாற்றப்பார்க்கின்றனர். ஷான் என்ற பாம்பாட்டியின் வசியத்தில் விஷாகா மாட்டிக்கொண்டு மீனா மூலமாக காப்பாற்றப்படுகிறாள். விஷாகா விக்ராந்தின் மனைவியாக விரும்பி அவனது வலையில் விழுந்து இறக்கிறார்.விக்ராந்த் யுவராஜ் உருவத்தில் மீனாவின் வீட்டில் உள்ளான்.விக்ராந்தின் அம்மாவை கண்டுபிடிக்க மீனா பல முயற்சிகளை செய்கிறாள் ஆனால் அவை நடக்கவில்லை.இந்த நிலையில் ஒரு கழுகு குடும்பம் நாக இனங்களை அழித்து நாகமணியை அடைய வந்துள்ளது.இதற்கிடையில் மீனாவுக்கும் யுவராஜ்க்கும் அதாவது விக்ராந்த் திருமண ஏற்பாடு நடக்கிறது.அந்நிலையில் விஷாகா திரும்ப வருகிறாள்.மீனா விஷாகாவை யுவராஜை திருமணம் செய் என கூற விஷாகாவும் முக்காடால் தலையை மூடி திருமணம் செய்கிறாள்.பின்னர் மீனா இருவரிடமும் எச்சரிக்கிறாள் விக்ராந்திற்கு அடியும் தந்தாள்.காரணம்,மீனாவிற்கு ஏற்கனவே அவளுடய அம்மா அனைத்தயும் கூறியிருந்திருக்கிறார்.மீண்டும் கழுகுகள் இச்சாதாரி நாகமான அரவிந்தை அழித்து விட்டன.நாகராணி மீனா தன் சேஷ நாக வம்சத்தை காக்க புதிய திட்டம் தீட்டுகிறாள். இப்போது ஜுலி, மீனாவின் தங்கை வெகுளித்தனமானவள். அவள் அறியாமல் வியோம் என்ற கழுகிடம் சேர்த்து நாகமணியை பறிகொடுத்து விடுகிறாள். மாஹிருக்கும் மீனா, விஷாகா, விக்ராந்த் பற்றிய உண்மைகள் தெரிந்து விடுகிறது.அதன் பிறகு மீனாவுக்கு விக்ராந்தின் உண்மைத் தாய் சுமித்ரா சேகர் என்பது தெரிகிறது.
கதாபாத்திரங்கள்
முன்னணி கதாபாத்திரங்கள்
பருவம் 1
- மௌனி ராய்- ஷிவன்யா ரஹேஜா, இச்சாதாரி நாகினி
- அதா கான்- ஸ்ரேயா, இச்சாதாரி நாகினி, ஷிவன்யாவின் தங்கை
- சுதா சந்திரன்- யமுனா ஜெயராஜ், கார்த்திக்கின் வளர்ப்புத் தாய்
- அர்ஜூன் பிஜ்லானி- கார்த்திக் சங்கரன் (ரித்திக் ரஹேஜா) /சிவ சங்கரன்
பருவம் 2
- மௌனி ராய்- ஷிவானி ராக்கி ப்ரதாப் சிங், இச்சாதாரி நாகினி
- அதா கான்- ஸ்ரேயா/ருச்சிகா/தக்ஷிகா, இச்சாதாரி நாகினி
- சுதா சந்திரன்- யமுனா, ராக்கியின் பெரியம்மா
- கரண்வீர் போரா- ராக்கி ப்ரதாப் சிங், இச்சாதாரி நாகம், ஷிவானியின் கணவன்
- ஆஷ்கா கொரடியா- அவந்திகா, மகிழ்மதியின் ராணி
- கின்ஷுக் மஹாஜன்- ருத்ரா, இச்சாதாரி நாகம்
பருவம் 3
- சுரபி ஜோதி- ருஹி/மீனா மாஹிர் சேகர்/ஷ்ராவ்ணி மாஹிர்,சேஷ வம்ச நாகராணி
- மௌனி ராய்-சிவானி ராக்கி பிரதாப் சிங்,சேஷ வம்ச மகா நாகராணி
- அனிதா ஹசானந்தனி- விஷாகா (விஷ்)/இச்சாதாரி நாகினி
- பியர்ல் V பூரி- மாஹிர் ஆன்டி சேகர்/மிஹிர்
- ராஜட் டோகஸ் - விக்ராந்த், இச்சாதாரி நாகம்
சிறப்புத் தோற்றம்
- துஷ்ஷர் கபூர், கௌஹர் கான், அப்தப் சிவதசனி- பருவம் 1, பகுதி-22
- அர்ஜுன் கபூர், ஷ்ரத்தா கபூர்- பருவம் 2, பகுதி-63
- கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா- பருவம் 3, பகுதி-1
- ராஜ்குமார் ராவோ, புளோரா சயினி, ஷ்ரத்தா கபூர் - பருவம் 3, பகுதி- 50
- திரிப்தி திம்ரி, அவினாஷ் திவாரி - பருவம் 3,பகுதி- 53,54
மற்ற மொழிகளில்
நாகின் தொடர் தெலுங்கு, மலையாளம், ஒரியம், பஞ்சாபியம், வங்காளம் போன்ற இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. மேலும் பாக்கித்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளிலும் அவரவர் மொழிகளில் ஒளிபரப்பாகிறது.
ஆதாரங்கள்
- Voot (in en) நாகினி தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க, https://www.voot.com/shows/naagin-tamil-/1/565620, பார்த்த நாள்: 2018-05-29
- Voot (in en) நாகினி 2 தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க, https://www.voot.com/shows/naagini-s02-tamil-/2/568256, பார்த்த நாள்: 2018-05-29
- Voot (in en), நாகினி-3 தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க, https://www.voot.com/shows/naagini-s03-tamil-/3/610024, பார்த்த நாள்: 2018-06-19