நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கோன் பனேங்கா கரோர்பதி என்ற நிகழ்ச்சியின் தமிழ் வடிவமே இந்நிகழ்ச்சியாகும்.[2] இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை நடிகர் சூர்யா, இரண்டாவது பகுதியை நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் மூன்றாவது பகுதியை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்கள். [3] இந்த நிகழ்ச்சி ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போச்புரி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
வடிவம் ஆட்ட நிகழ்ச்சி
வழங்குநர் சூர்யா (1)
பிரகாஷ் ராஜ் (2)
அரவிந்த்சாமி (3)
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
ஓட்டம்  90 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு பெப்ரவரி 7, 2012 (2012-02-07)
இறுதி ஒளிபரப்பு 19 நவம்பர் 2016 (2016-11-19)
புற இணைப்புகள்
வலைத்தளம்

ஏனைய மொழிகள்

இந்நிகழ்ச்சி வேறு சில இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

தலைப்புமொழிநிகழ்ச்சியை நடத்துபவர்தொடங்கிய திகதி
கோன் பனேங்கா கரோர்பதிஹிந்திஅமிதாப் பச்சன்2000 சூலை 3[4]
கன்னடட கோட்யடிபதிகன்னடம்புனீத் ராஜ்குமார்2012 மார்ச் 12[5]
கே ஹோபே பங்களர் கோடிபோடிவங்காளம்சௌரவ் கங்குலி2011 சூன் 4[6]
கே பானி குரோர்பதிபோச்புரிசத்ருகன் சின்ஹா2011 சூன் 6[7]
நிங்கள்க்கும் ஆகாம் கோடீஷ்வரன்மலையாளம்சுரேஷ் கோபி2012 ஏப்ரல்[8]

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.