ஓவியா (தொலைக்காட்சித் தொடர்)
ஓவியா என்பது 26 நவம்பர் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு நாடகத் தொடர் ஆகும்.[1]இந்த தொடரை சாய் மருது என்பவர் இயக்க கோமதி பிரியா மற்றும் ஹர்ஷாலா கதாநாயகிகளாக நடிக்கின்றார்கள். இந்த தொடர் ஏழை குடுப்பத்தை சேர்ந்த ஓவியாவும் பணக்கார குடுப்பத்தை சேர்ந்த கயாத்திரியும் எப்படி நண்பர்களாக வாழ்கின்றனர் என்பதை விவரிக்கின்றது.[2]
ஓவியா | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகம் |
தயாரிப்பு | அஹமத் |
எழுத்து | தட்ஷணாமூர்த்தி ராமர் |
இயக்கம் | சாய் மருது |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
தயாரிப்பு | மெராக்கி பிலிம்ஸ் மெர்க்ஸ் |
தொகுப்பு | ச. மகேஷ் |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஒளிப்பதிவு | கல்யாண் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 26 நவம்பர் 2018 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
கதைச்சுருக்கம்
மீனவ குடும்பத்தில் பிறந்த ஓவியா, அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
பணக்கார குடும்பத்தை சேர்த்த காயத்திரி, தனக்கு தேவை என்றால் எதையும் அடைய நினைப்பவள். மாறுபட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்டிருக்கும் ஓவியா மற்றும் காயத்ரி இருவரும் நண்பர்களாகின்றார். அவர்களது நட்பின் பிணைப்பு சிதைக்கப்படாமல் பாதுகாக்கவும் முயற்சி செய்கிற இரு தோழிகளுக்கிடையே நடக்கும் நிகழ்ச்சிகளின் போராட்டமே இந்த தொடரின் கதை.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- கோமதி பிரியா - ஓவியா
- சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குடும்பத்தில் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண் ஓவியா. அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், நேர்மைக்காகவும் கனிவான நடத்தைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள்.
- ஹர்ஷாலா - காயத்ரி
- வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்கு களையும் லட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் செல்வதற்குத் தயாராக இருப்பதோடு, பிறரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவளாகவும் இருக்கிறாள்.
- சூர்யா
துணை கதாபாத்திரம்
- சிந்து சியாம் - அன்பு (ஓவியாவின் தாய்)
- அரவிந் -
- திவ்யா பானு - அறிவழகி
- ராஜ் மித்ரன்
- ஜீவா ரவி (காயத்ரியின் தந்தை)
ஆதாரங்கள்
- "ஓவியா - கலர்ஸ் தமிழில் புதிய தொடர்" (ta). cinema.dinamalar.com.
- "கலர்ஸ் தமிழில் புதிய தொடர் ஓவியா" (ta). cinema.dinamalar.com.