கொங்கு நாட்டு சமையல்

கொங்கு நாட்டு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு என்ற பகுதியில் வழக்கத்தில் உள்ள சமையல் மரபு. இப்பகுதியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர், கொங்கு வேட்டுவக் கவுண்டர் கொங்கு உடையார், தெலுங்கு பேசும் நாயுடு, செங்குந்தர்கள், செட்டியார்கள் போன்ற இனத்தவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். கொங்கு நாடு தனக்கென்று எப்பொழுதும் தனியான வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. கொங்கு நாட்டு சமையல் எளிமையும், சுவையும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை.

சமையல்

இது சமையல் முறை
கட்டுரைத் தொடரின் பகுதியாகும்
செய்முறைகளும் சமையல் பொருள்களும்
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்
சமைத்தலில் உள்ள அளவுகள்
தமிழர் சமையல்
உணவுப் பொருட்கள் பட்டியல்கள்
பிராந்திய சமையல் முறை

உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்
தெற்காசியா - இலத்தின் அமெரிக்கா
மத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஏனைய உணவு முறைகள்...

See also:
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்
Wikibooks: Cookbook

கொங்கு நாட்டு சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவது கம்பு, திணை, சாமை, அரிசி, வீட்டில் இடித்து அரைத்த புத்தம் புது மசாலாக்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தோட்டத்தில் அவ்வப்போது பறித்த காய்கறிகள், உருக்கிய நெய், கட்டித்தயிர் என்பனவாகும். கொங்கு நாட்டு அசைவ உணவில் பங்கு வகிப்பது நாட்டுக்கோழி, வெள்ளாட்டு இறைச்சி, மீன், இறால் போன்றவைகளாகும். மற்ற வட்டார மக்களைப் போலவே இவர்கள் பன்றி மற்றும் மாட்டு இறைச்சியினை உண்பதில்லை.

கொங்கு நாட்டில் பெரும்பாலான உணவு வகைகள் கம்பு, திணை, சாமை, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம் போன்ற தானியங்கள் வெகுவாகப் பயன்படுத்திச் சமைத்த கூழ், சோறு, தோசை, அடை, இட்லி, பொங்கல் என்பனவாகும். கொங்கு நாட்டு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன. கொங்கு நாட்டுக்கோழி குழம்புக்கு கொடிய ஜலதோஷத்தையும் விரட்டும் சக்தியுண்டு.

சில பிரபலமான சைவ உணவுகள்

கொங்கு நாட்டு சமையலின் சில சைவ உணவுகள்:

  • சோளச்சோறு
  • கம்மஞ்சோறு
  • திணைச்சோறு
  • சாமைச்சோறு
  • ராகி களி
  • அரிசிச்சோறு (நெல்லஞ்சோறு)
  • உப்புப்பருப்பு
  • கீரை கடைஞ்சது
  • அரிசியும்பருப்பும் சோறு
  • கொள்ளுப் பருப்பு கடைஞ்சது
  • பச்சைப்பயிறு கடைஞ்சது
  • புளிச்ச கீரை கடைஞ்சது
  • பருப்புச்சோறு
  • நிலக்கடலை சட்டினி
  • எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
  • மோர்க்குழம்பு
  • பச்சைக் கொள்ளு ரசம்
  • செலவு ரசம் (அரைச்சு விட்ட ரசம்)
  • கம்பு மாவு
  • கொங்கு கார தோசை
  • திணை முறுக்கு
  • மசால் வடை

வாசனைச் சரக்குகள்

கொங்கு நாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.