கன் சண்டை

கன் சண்டை (Battle of Caen) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கன் நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.

கன் சண்டை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

கன் சண்டை
நாள் ஜூன் 6, 1944ஆகஸ்ட் 6, 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
மேல்நிலை உத்தியளவில் நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 நாட்சி ஜெர்மனி

ம்

தளபதிகள், தலைவர்கள்
பெர்னார்ட் மோண்ட்கோமரி
மைல்ஸ் டெம்சி
எர்வின் ரோம்மல்
ஃபிரடரிக் டோல்மான் 
பவுல் ஹவுசர்
லியோ கெய்ர் வோன் ஷ்வெப்பென்பர்க்
செப்ப டயட்ரிக்
பலம்
3 கவச டிவிசன்கள்
11 காலாட்படை டிவிசன்கள்
5 கவச பிரிகேட்கள்
3 டாங்கு பிரிகேட்கள்
7 காலாட்படை டிவிசன்கள்
8 கவச டிவிசன்கள்
இழப்புகள்
~50,539 ~50,000
550 டாங்குகள்

பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கன், நார்மாண்டி பகுதியின் மிகப்பெரிய நகரம். நார்மாண்டியிலிருந்து பிரான்சின் பிறபகுதிகளுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பாக விளங்கியது. இதனைப் பயன்படுத்தி எதிர்த்தாக்குதலுக்கு ஜெர்மானியர்கள் படைகளை விரைவில் நகர்த்தும் சாத்தியமிருந்தது. ஓர்ன் ஆறு மற்றும் கன் கால்வாய் ஆகிய நீர்நிலைகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்நீர்நிலைகள் நேச நாட்டுப் முன்னேற்றத்துக்குப் பெரும் தடைகளாக இருந்தன. மேலும் கானை சுற்றிய பகுதிகள் சமவெளியாக இருந்ததால் விமான ஓடு தளங்களை அமைக்க ஏற்றதாக அமைந்தன. இந்த மூன்று காரணங்களால் நேச நாட்டு உத்தியாளர்கள் கன் நகரைக் கைப்பற்ற விரும்பினர். படையெடுப்பு துவங்கிய ஜூன் 6 முதல் ஆகஸ்ட் மாத முதல் வாரம் வரை கன் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

சுவார்ட் கடற்கரையில் தரையிறங்கிய பிரிட்டானிய 3வது காலாட்படை டிவிசன் கன் நகரைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி வெற்றியடையவில்லை. நகரின் வடக்குப் பகுதியில் ஒரு பாலமுகப்பை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. கன் மீதான அடுத்த கட்ட தாக்குதல் ஜூன் 9ம் தேதி தொடங்கியது. பெர்ச் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்டிருந்த இத்தாக்குதலும் பத்து நாட்கள் சண்டைக்குப்பின் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்து கனை சுற்றி வளைக்கும் முயற்சியில் நேச நாட்டுப் படைகள் ஈடுபட்டன. மார்ட்லெட் நடவடிக்கை, எப்சம் நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் ஜூன் இறுதி வாரத்தில் நகரின் தெற்கில் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. ஜூலை மாதம் நடைபெற்ற விண்ட்சர் நடவடிக்கை, ஜூபிடர் நடவடிக்கை, குட்வுட் நடவடிக்கை மற்றும் சார்ண்வுட் நடவடிக்கையின் மூலம் நகரின் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் சில வார சண்டைக்குப் பின்னர் ஆகஸ்ட் 6ம் தேதி கன் முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமானது.

படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.