களச்சாவு

களச்சாவு அல்லது வீரச்சாவு (Killed in Action) என்பது மரணமடைந்த படைத்துறையினரை இனங்காண இராணுவங்கள் பயன்படுத்தும் வகைப்பாடுகளுள் ஒன்று. பொதுவாக எதிர் தரப்பு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள் இந்த வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள். முன்னணி படைகள், கப்பற்படை, வான்படை, துணைப்படைகள் என அனைத்து வகைப் பிரிவுகளிலும் சண்டைகளில் மரணமடைந்தவர்கள் இப்படி வகைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் போர்முனையில் விபத்துகளில் இறப்பவர்கள் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அதே போல போர்க்களத்தில் காயமடைந்து பின் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களும் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் காயச்சாவு (died of wounds) என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்படுகிறார்கள். களச்சாவு அடைபவர்களை சமூகங்கள் பல வகைகளில் போற்றுகின்றன. பழந்தமிழ் நாட்டில் இவர்களை நடுகல் நாட்டியும் பள்ளிப்படைக் கோவில்கள் கட்டியும் வழிபட்டதுண்டு. தற்காலத்தில் களத்தில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. அவர்களது கல்லறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.

இந்தியாவின் வாயில் - களச்சாவு கண்ட அடையாளம் காணப்படாத போர்வீரர்களின் நினைவுச் சின்னம்

வெளி இணைப்புகள்

    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    களச்சாவு
    என்பதின் ஊடகங்கள் உள்ளன.


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.