பள்ளிப்படை

பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் படைத் தளபதிகள், புலவர்கள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள். கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் காணப்பட்ட கோயில்கள் இறந்த வீரர்களுக்குரிய சமாதிக் கோயில்களாகவே இருந்ததாகத் தெரிகிறது. இதற்குப் பின்னரே இவைகள் பள்ளிப்படைகள் என அழைக்கப்பட்டன.

இறந்துபோன முன்னோர்களையும், வீரர்களையும் வணங்கும் வழக்கத்தில் இருந்தே கோயில்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகின்றது. இவ்வளர்ச்சியில் பள்ளிப்படைக் கோயில்கள் ஒரு கட்டமாகும். ஆண்களுக்குப் பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப்பட்டது போலவே அரசகுலப் பெண்கள் சிலருக்கும் பள்ளிப்படைகள் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளரது கூற்று ஆகும். ஆண்களது பள்ளிப்படைகளில் லிங்கம் வைப்பது வழக்கமாக இருந்தது. இதனால், பிற்காலத்தில் இவை சிவன் கோயில்களாக மாறிவிட்டன.

பள்ளிப்படை அடக்க முறை

உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில் திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல் ஆகியவை அடுக்கப்பட வேண்டும். அதன் மீது மரணித்தவரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் மேற்கூறிய பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட வேண்டும். இம்முறையை பள்ளிப்படை முறை என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் உப்பு, மிளகு போடுவதால் மரணித்தவரின் உடல் பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது.[1]

தற்போது உள்ள பள்ளிப்படைகள்

ஊடகங்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.