ஆதித்த சோழன் பள்ளிப்படை
ஆதித்த சோழன் பள்ளிப்படை என்பது தற்கால ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் புத்தூர் காளஸ்தி செல்லும் பாதையில் காலஸ்திக்கு முன்னதாக அருகில் உள்ள தொண்டமானாற்றூர் (இப்போது தொண்டமானாடு என்று அழைக்கிறார்கள்) பக்கத்தில் உள்ள பொக்கசம்பாளையம் என்ற இடத்தில் உள்ள பள்ளிப்படைக் கற்றளி ஆகும். தொண்டமானாற்றூரில் இறந்த ஆதித்த சோழனின்[1] அஸ்தியை புதைத்து அந்த இடத்தில் அவரது மகன் பராந்தக சோழனால் கட்டப்பட்ட பள்ளிப்படை இதுவாகும். இது தற்காலத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது [2]
கோயில் அமைப்பு
தஞ்சை பெரிய கோவிலை கட்டி கட்டிடக் கலையில் உயர்ந்து நின்ற, பிற்கால சோழர்களின் துவக்கக் கால கட்டிடக் கலைக்கு இந்த கோவில் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.. இப்போதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டு பிற்காலத்தில் கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- 3.2 சோழப் பேரரசர்கள் - முதல் ஆதித்தசோழன் (கி.பி.871-907)
- "மீண்டும் உயிர்த்தெழுகிறான் ஆதித்தன்". கட்டுரை. http://www.varalaatrupudhayal.in.+பார்த்த நாள் 16 சனவரி 2017.