ஊரின் சிகூரட்

ஊரின் சிகூரட் (ஆங்கிலம்:Ziggurat of Ur; ஊரின் பெரும் சிகூரட் எனவும் அழைக்கப்படும்; பொருள்: திகிலை உருவாக்கும் அடித்தளமுடைய வீடு)[1][2] என்பது ஈராக்கின் தற்போதைய தி கார் மாகாணத்திலுள்ள ஊர் எனும் நகரில் சுமேரியக் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட சிகூரட் எனப்படும் கட்டடம் ஆகும்.[3] (சிகூரட் என்பது பண்டைய கீழ் மெசொப்பொத்தேமியாவில் கட்டப்பட்ட பாரிய கட்டமைப்பாகும்.)

ஊரின் சிகூரட்
மீளமைக்கப்பட்ட சிகூரட்டின் முகப்பு. பிற்கால பாபிலோனியா கட்டமைப்பு எச்சங்களையும் காணலாம்
Shown within Iraq
இருப்பிடம்தி கார் மாகாணம், ஈராக்
பகுதிகீழ் மெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்30°57′46″N 46°6′11″E
வகைகோவில்
பகுதிஊர்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 21ம் நூற்றாண்டு

இக்கட்டடம் ஆரம்ப வெண்கல காலத்தில் ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்மு காலத்தில் (கி.மு 21ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதாயினும், கி.மு. 6ம் நூற்றாண்டில் சிதைவுற்று எச்சங்களாகியதை புது பாபிலோனியப் பேரரசு காலத்தில், அரசன் நபோனியசஸ் மீளமைத்தார்.[4]

இதனையும் காண்க

உசாத்துணை

  1. Jacob Klein Three Šulgi hymns: Sumerian royal hymns glorifying King Šulgi of Ur, Bar-Ilan University Press (1981), ISBN 978-965-226-018-5, p. 162.
  2. Explore the ziggurat of Ur, The Ziggurat of Ur, The British Museum
  3. UR, IRAQ
  4. Ur, ANCIENT CITY, IRAQ

மேலும் வாசிக்க

  • Woolley, C. Leonard and Moorey, P. R. S., Ur of the Chaldees: Revised and Updated Edition of Sir Leonard Woolley's Excavations at Ur, Cornell University Press (1982).

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.