உத்தம வில்லன் (2015 திரைப்படம்)

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி, தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். மேலும் ஜிப்ரானின் இசையில் கிரேசி மோகனின் வசனத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

உத்தம வில்லன்
இயக்கம்ரமேஷ் அரவிந்த்
தயாரிப்புலிங்குசாமி
கமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
கிரேசி மோகன்
இசைஜிப்ரான்
நடிப்புகமல்ஹாசன்
கே. பாலச்சந்தர்
ஊர்வசி
ஒளிப்பதிவுசியாம் தத்
படத்தொகுப்புவிஜய் சங்கர்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
ராஜ்கமல் பிலிம்ஸ்
வெளியீடுமே 02, 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முகநூல் பக்கம்உத்தம வில்லன்

நடிப்பு

படப்பிடிப்பு

2014 பிப்ரவரி மாதத்தின் மத்தியில், கதைக்குப் பொருந்தும் வகையில் கமலஹாசனுக்கு ஒப்பனைகள் செய்து பார்க்கப்பட்டது[1]. இப்படத்தின் இலட்சனை மற்றும் முதல் முன்னோட்ட நிகழ்படம், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் நாள் வெளியிடப்பட்டது.[2].

சர்ச்சை

படத்தின் முதல் முன்னோட்ட நிகழ்படத்தில் கமல்ஹாசன், கேரளத்தின் பண்டைய கலைகளுள் ஒன்றான தேயத்தின் ஒப்பனையில் காட்சியளிப்பார். இதில் வருவது போன்ற ஒப்பனை மற்றும் காட்சியாக்கம், பிரஞ்சு புகைப்படக் கலைஞர் எரிக் லாஃபர்கியு என்பவரால் முன்பே காட்சியாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது[3]. இப்படத்தில் பதிவாகியுள்ள ஒரு பாடல் வரிகளை மையப்படுத்தி இந்து பரிசத் வழக்குத்தொடுத்தது. அந்த வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[4]

பாடல்கள்

எண்பாடல்பாடலாசிரியர்பாடியவர்(கள்)நீளம்
1லவ்வா லவ்வாவிவேகாகமல்ஹாசன், சரண்யா கோபிநாத், அனிதா நிவாஸ்04:42
2காதலாம் கடவுள்முன்கமல்ஹாசன்பத்மலதா04:04
3உத்தம (அறிமுகம்)சுபு ஆறுமுகம்சுபு ஆறுமுகம், கமல்ஹாசன்02:49
4சாகாவரம்கமல்ஹாசன்கமல்ஹாசன், யாசின் நிசார், ரஞ்சித் ஐயப்பன், ஜிப்ரான்02:48
5இரணியன் நாடகம்கமல்ஹாசன்கமல்ஹாசன், ருக்மணி அசோக்குமார்04:50
6முத்தரசன் கதைகமல்ஹாசன்யாசின் நிசார், பத்மலதா, ரஞ்சித் ஐயப்பன்08:09
7உத்தமன் கதைகமல்ஹாசன்எம். எஸ். பாஸ்கர், யாசின் நிசார், ரஞ்சித் ஐயப்பன்07:31
8உத்தம வில்லன் தீம்Instrumental01:15
9குரு சிஷ்யாInstrumental01:39
10பாதர் அன்ட் டாட்டர்Instrumental02:20
11உத்தமன் & கற்பகவல்லிInstrumental01:37
12பாதர் அன்ட் சன்Instrumental02:31
13லெட்டர் பிரம் அன்ட் டூ யாமினிInstrumental02:38
14டாக்டர் அற்பனாInstrumental01:25
15காதலாம் கடவுள்முன்Karaoke04:04
16சாகாவரம்Karaoke02:47
17இரணியன் நாடகம்Karaoke04:40

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.