விவேகா

விவேகா ஒரு தமிழ்த் திரையிசைப் பாடலாசிரியர் ஆவார். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூருக்கு அருகில் உள்ள வேடங்குளம் எனும் கிராமத்தில் பிறந்த இவர் திருவண்ணாமலையிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். பின்னர் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

விவேகா
விவேகானந்த வீர வைரமுத்து
பிறப்புவேடங்குளம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிகவிஞர்
பாடலாசிரியர்
பெற்றோர்முனுசாமி,
சௌபாக்கியம்மாள்

திரைப் பாடலாசிரியர்

விவேகா ”நீ வருவாய் என” என்ற படத்தில் “பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் எழுதி வந்தவருக்கு “கந்தசாமி” எனும் படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அப்படத்தின் அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழின் முன்னணி பாடலாசிரியரானார்.சமீபத்தில் வெளிவந்த ’வேலைக்காரன்’ படத்தில் ”கருத்தவன்லாம் கலீஜாம்” பாடலோடு இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்[1]

நூல்கள்

  • உயரங்களின் வேர் - கவிதைத் தொகுப்பு.

பாடல் எழுதியுள்ள படங்களில் சில

  • வேதாளம்
  • காஞ்சனா-2
  • சிங்கம்
  • சிங்கம்-2
  • வானத்தைப் போல
  • ஆனந்தம்
  • உத்தம வில்லன்
  • திருவிளையாடல் ஆரம்பம்
  • நண்பன்
  • துப்பாக்கி
  • கந்தசாமி
  • சிறுத்தை
  • வேட்டைக்காரன்
  • அஞ்சான்
  • வேலாயுதம்
  • கோ
  • வீரம்
  • ரன்
  • ஜில்லா
  • மாற்றான்
  • கண்ணா லட்டு தின்ன ஆசையா
  • காஞ்சனா
  • என்றென்றும் புன்னகை
  • ராமன் தேடிய சீதை
  • ஈரம்
  • சமுத்திரம்
  • சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
  • சந்தோஷ் சுப்பிரமணியம்
  • தில்லாலங்கடி
  • மன்மதன் அம்பு
  • வில்லு
  • காவலன்
  • மாசிலாமணி
  • ஜி
  • ராட்டினம்
  • வேங்கை
  • குட்டி
  • தெனாலிராமன்
  • நையாண்டி
  • நீ வருவாய் என
  • வின்னர்
  • இவன் வேற மாதிரி
  • சகுனி
  • அரவான்
  • ரத்த சரித்திரம்
  • உனக்காக எல்லாம் உனக்காக
  • காதல் சுகமானது
  • சிங்கம் புலி
  • கச்சேரி ஆரம்பம்
  • கந்தக் கோட்டை
  • வல்லினம்
  • தாஸ்
  • பள்ளிக்கூடம்
  • சென்னைக் காதல்
  • தமிழ்
  • ஆயுதம்
  • குபேரன்
  • கந்தா கடம்பா கதிர்வேலா
  • அலேக்ஸ் பாண்டியன்
  • பரட்டை என்கிற அழகு சுந்தரம்
  • 180
  • வேலூர் மாவட்டம்
  • விண்ணூக்கும் மண்ணூக்கும்
  • காதலுடன்
  • வந்தேமாதரம்
  • வெடி
  • தோரணை
  • யுவன்
  • தம்பிக்கோட்டை
  • சுட்டும் விழிச் சுடரே
  • ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
  • பிடிச்சிருக்கு
  • நெஞ்சைத் தொடு
  • நம்பியார்
  • நந்தனம்
  • நைனா
  • நான் அவன் இல்லை
  • மிளகா
  • மந்திரப் புன்னகை
  • மதிகெட்டான் சாலை
  • மாஞ்சா வேலு
  • காசேதான் கடவுளடா
  • கண்பேசும் வார்த்தைகள்
  • கலவரம்
  • கலிங்கா
  • காத்தவராயன்
  • காதல் டாட் காம்
  • இஷ்டம்
  • ஆடுபுலி
  • இன்பா
  • ஃபைவ் ஸ்டார்
  • திக் திக் திக்
  • கேம்பஸ்
  • தனுஷ் ஐந்தாம் வகுப்பு
  • அரசாட்சி
  • அன்புத்தொல்லை
  • வல்லரசு
  • அற்புதம்
  • சுதேசி
  • ஆட்ட நாயகன்
  • ஆதி நாராயணா
  • அகம் புறம்
  • ப்ரியசகி
  • அழகிய பாண்டிபுரம்
  • பலம்
  • பொம்மலாட்டம்
  • மற்றும் பல படங்கள்

மேற்கோள்கள்

  1. http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9983
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.