ஜிப்ரான்

ஜிப்ரான் (பிறப்பு: 12 ஆகத்து 1980) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து குட்டிப் புலி, நையாண்டி போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் ரன் இராஜா ரன் என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஜிப்ரான்
பிறப்புமுகமது ஜிப்ரான்
12 ஆகத்து 1980 (1980-08-12)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபாடலாசிாியர், இசையமைப்பாளர்.
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011 – தற்போது

இளமை

கோவையில் பிறந்த ஜிப்ரான், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரது தந்தையின் தொழில் முடங்கியதால், சென்னைக்குக் குடியேறினார்[1]

தனது 8 ஆவது அகவையில், கிரேக்க இசைக்கலைஞர் யன்னியின் கின்னரப்பெட்டி வாசிப்பைக் கேட்டு அதில் மிக்க நாட்டம் கொண்டார். இசைப்பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருசில தடங்கல்களால், கின்னரப்பெட்டி வகுப்பிற்குச் செல்லாமல் மாறாக பால் அகஸ்த்தின் என்பவரிடம் கிளபம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். இசைப்பள்ளி முடித்து இரண்டாண்டுகள் கழித்து (2000ம் ஆண்டு), சொந்தமாக இசைக்கூடம் ஒன்றை நிறுவினார். ஆறாண்டு காலத்தில், ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்[1].

பின்னர் மேற்பட்டயப் படிப்பிற்காக சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்தார். பகுதி நேர வேலையாக அங்கிருந்த சில இசைக்கூடங்களில் பின்னிசையாளராக பணியாற்றினார். போதிய வருமானமின்மையால், இந்தியா திரும்பினார். நீண்ட இடைவெளி காரணமாக, அவரது விளம்பரங்களுக்கு இசையமைக்கும் தொழில் பாதிப்படைந்தது[1].

பணிவாழ்வு

இசையமைத்த படங்கள்

ஆண்டுபடத்தின் பெயர்மொழிகுறிப்பு
2011வாகை சூட வாதமிழ்வெற்றி: விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு)
பரிந்துரை: பிலிம்பேர் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்),
2013வத்திக்குச்சிதமிழ்
குட்டிப் புலிதமிழ்
நய்யாண்டிதமிழ்
2014திருமணம் எனும் நிக்காஹ்தமிழ்
ரன் இராஜா ரன்தெலுங்குதெலுங்கு திரைப்பட துறையில் முதல் படம்.
அமரகாவியம்தமிழ்
2015ஜில்தெலுங்கு
உத்தம வில்லன்தமிழ்
பாபநாசம்தமிழ்
தூங்காவனம் (சீகட்டி ராஜ்ஜியம்)தமிழ்,
தெலுங்கு
2016பாபு பங்காரம்தெலுங்கு
ஹைபர்தெலுங்குபாடல்களுக்கு மட்டும் இசை
2017அதே கண்கள்தமிழ்
உங்காரலா ராம்பாபுதெலுங்கு
மகளிர் மட்டும் (2017)தமிழ்
அறம்தமிழ்
தீரன் அதிகாரம் ஒன்றுதமிழ்
மாயவன்தமிழ்
சென்னை 2 சிங்கப்பூர்தமிழ்
2018விஸ்வரூபம் 2தமிழ்,
இந்தி
ஆண் தேவதைதமிழ்
ராட்சசன்தமிழ்
2019அதிரன்மலையாளம்
ஹவுஸ் ஓனர்தமிழ்
கடாரம் கொண்டான்தமிழ்

விருதுகள்

ஆண்டு திரைப்படம் மொழி வகை வழங்கியவர் முடிவு
2011 வாகை சூட வா தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் பரிந்துரை
ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு விஜய் விருதுகள் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த தன்னம்பிக்கையாளர் ஆனந்த விகடன் விருதுகள் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் மிர்ச்சி திரையிசை விருதுகள் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த அறிமுக இசையமைப்பாளர் பிக் பண்பலை மெல்லிசை விருதுகள் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

மேற்கோள்கள்

  1. "மனதளவில் பாதிப்படைந்தேன்: ஜிப்ரான்". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்த்த நாள் 30 நவம்பர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.