கோயம்புத்தூர் மாநகராட்சி

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் பெரும் தொழில் நகரமாக (தென்னிந்தியாவின் மான்செஸ்டர்) இருக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பே கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்ட ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி சுமார் 105.6 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும்.இது தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.இந்தியாவின் 15 வது மிகப்பெரிய நகரமாகவும் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது.

கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி

கோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக(cosmopolitan city) வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.

சிறப்புகள்

  • தமிழ்நாட்டில் இரண்டு விமான நிலையங்கள் அமைந்துள்ள பெரிய மாநகரம் இரண்டு மட்டுமே. அது சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகும். கோயம்புத்தூரில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன.இந்த கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் 17வது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும்.
  • பன்னாட்டு விமான நிலையம் அவினாசி சாலை வழியாக கோவை மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் சென்றடையும் விதமாக அமைந்துள்ளது.
  • மலைகளின் இராணி என அழைக்கப்படும் உதகமண்டலம் (ஊட்டி)கோவையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சாலைகள் மூலமும் மலைத் தொடர்வண்டியின் மூலமும் கோவையை இணைக்கின்றது.
  • கோவை மாநகரம் இதர மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவை தேசிய நெடுஞ்சாலை 47 மூலம் இணைக்கின்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
105.6 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 34,58,045
பெருநகர மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம் மத்திய மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
148 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மாநகராட்சி வடிவமைப்பு

மாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்களும் மேலும் மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது. தற்பொழுது 25.11.2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.கோயம்புத்தூர் மாநகராட்சியானது தற்பொழுது 100 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் இந்த மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக

  1. இருகூர்
  2. கண்ணம் பாளையம்
  3. பள்ளப் பாளையம்

ஆகிய மாநகராட்சி எல்லையில் உள்ள பேரூராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புதிதாக 48 வார்டடுகள் இணையவுள்ளன.இதனால் கோவை பெருநகர மாநகராட்சியில் 148 வார்களை கொண்ட தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சி என அந்தஸ்தை பெறுகிறது.

பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சி

1871ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பின் மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவையால் அ.தி.மு.க 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2013ம் ஆண்டு கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.மேலும் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு நிகரான பரப்பளவை கொண்ட மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும்.மேலும் கோவையில் கிடைக்கும் காலநிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது என்பது 100% உண்மை.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.