ஆண்மையியக்குநீர்
ஆண்மையியக்குநீர் (Testosterone) அல்லது (ஆங்கிலம்:டெஸ்டெஸ்தரோன்) என்பது ஓர் அந்திரோசன் வகை பாலின இயக்குநீர் ஆகும். இயக்க ஊக்கி இயக்குநீர்கள் கொலஸ்டிராலில் இருந்து உருவானவை. பாலின இயக்க ஊக்கி உடலின் இனப்பெருக்கத் தொகுதி அவயங்களில் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. அந்திரோசன் வகை இயக்குநீர்கள் ஆண்மை ஊக்கிகளாகும்.
ஆண்களின் விந்துச் சுரப்பிகள் மிகக் கூடுதலான இசுடெசுத்தோசத்தெரோனைச் சுரக்கின்றன. சூலகங்களும் அண்ணீரகச் சுரப்பிகளும் இதனை குறைந்தளவில் சுரக்கின்றன. பெண்களை விட ஆண்களில் மிகவும் கூடுதலான அளவில் இருக்கிறது.
இசுடெசுத்தோசத்தெரோன் இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக இது ஓர் ஆக்கமிக்க வளர்சிதைமாற்றத்தை உருவாக்குகிறது. இதனால் தசைகளும் எலும்புகளும் மிக்க வளர்ச்சி அடைகின்றன. மற்றது இது ஓர் ஆண்மை ஊக்கியாகச் செயலாற்றுகிறது. இவை இரண்டும் சேர்ந்து உடலுக்கு ஆண்மைத்தன்மையைக் கொடுக்கிறது.
இதனால் பருவ காலத்தில் சிறுவர்களுக்கு மீசை,தாடி முளைப்பதும், ஆண்குறி, விந்துப்பை பெரிதாவதும் குரல் உடைவதும் நிகழ்கின்றன.
புற இணைப்புகள்