லெப்டின்

லெப்டின் (leptin) என்பது கொழுப்புத் திசுவால் சுரக்கப்பட்டுப் பசியைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய இயக்குநீர் ஆகும்.

Leptin
Structure of the obese protein leptin-E100.[1]
அடையாளங்கள்
குறியீடு லெப்டின்
Pfam PF02024
Pfam clan CL0053
InterPro IPR000065
SCOP 1ax8

லெப்டின் எனும் சொல் லெப்டோஸ் எனும் கிரேக்கச் சொல்லின் அடிமுதலாய்ப் பிறந்தது. லெப்டோஸ் என்பதற்கு 'ஒல்லியான' என்று பொருள்.லெப்டின் 16,000 டால்டன் எடையுள்ள ஒரு புரத இயக்குநீர் ஆகும். உணவு நாட்டம், வளர்சிதைமாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கொழுப்புத்திசுவால் சுரக்கப்படுகிறது. இந்த இயக்குநீருக்கான மரபணு மனிதர்களில் ஏழாவது நிறப்புரியிலும் எலிகளில் ஆறாவது நிறப்புரியிலும் அமைந்துள்ளது.

கண்டறிதல்

ஜாக்சன் ஆய்வகத்தில் 1950ஆம் ஆண்டு திடீர் மாற்றமுற்ற மிக அதிகப்பசி கொண்ட குண்டு எலி ஒன்றை ஆராய்ந்தனர். அப்போது அந்த எலியின் ob/ob எனும் ஜீன் திடீர்மாற்றம் அடைந்திருந்ததை கொண்டிருந்தனர். எனவே இந்த ஜீன் பசியைக் கட்டுப்படுத்துகிறது என்பதை உய்த்துணர்ந்தனர். மேலும் அந்த குண்டு எலிக்கு ஊசி மூலம் லெப்டினைக் கொடுக்க அந்த எலி தனது இயல்பு எடைக்குத் திரும்பியதையும் கண்டுற்றனர். 1994 ஆம் ஆண்டு ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரீ எம். ஃபிரட்மேனும் சக ஆய்வாளர்களும் லெப்டினின் புரதக் கட்டமைப்பபைக் கண்டறிந்தனர்.

உடலுள் உற்பத்தி

மனித லெப்டின் 167 அமினோ அமிலங்களை உடையது. இது முதன்மையாக வெள்ளைக் கொழுப்புத்திசுவில் இருந்து சுரக்கப்படுகிறது. குருதி ஓட்டத்தில் உள்ள லெப்டினின் அளவு உடலில் உள்ள வெள்ளைக் கொழுப்புத் திசுவின் அளவுடன் நேர்த்தகவில் அமைகிறது.

வெள்ளைக் கொழுப்புத்திசு மட்டுமன்றி பழுப்புக் கொழுப்புத் திசு, அண்டகங்கள், எலும்பு மஜ்ஜை, பிட்யூட்டரி, கல்லீரல் மற்றும் இரைப்பையின் முதன்மைச் சுரப்பிகளால் கூடச் சுரக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Zhang F, Basinski MB, Beals JM et al. (May 1997). "Crystal structure of the obese protein leptin-E100". Nature 387 (6629): 206–9. doi:10.1038/387206a0. பப்மெட்:9144295.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.