கொழுப்பிழையம்

இழையவியலில் கொழுப்பிழையம் (adipose tissue) என்பது தளர்வான நிலையில் அமைந்திருக்கும் ஒரு வகை இணைப்பிழையம் ஆகும். இதிலுள்ள கலங்கள் அடிப்போசைட் எனப்படும். இவை உடம்பில் கொழுப்பு தாங்கும் இடத்தில் காணப்படும் இழையம் ஆகும். மனித உடலில் இருக்கும் கொழுப்புகள் இந்த இந்த இழையத்தில் உள்ள "கொழுப்பு தாங்கும் செல் " களில் தான் சேர்த்து வைக்கப் படுகின்றன.

அடிப்போசைட்டுக்களைத் தவிர இந்த இழையத்தில் பிரீயடிப்போசைட்டுக்கள், நார்முன்செல்கள், குருதிநாள அகவணிக்கலங்கள் மற்றும் பல்வேறு நோயெதிர்ப்புக் கலங்கள் (கொழுப்பிழைய பெருவிழுங்கிகள்) உள்ளடங்கி உள்ளன. பிரீயடிப்போசைட்டுகளிலிருந்து கொழுப்பிழையம் உருவாகிறது. இதன் முதன்மை நோக்கம் கொழுமியங்களைச் சேகரித்து வைப்பதன் மூலம் பிற்காலப் பயன்பாட்டிற்காக சக்தியை சேகரிப்பதாகும். மேலும் இது உடலுக்கு வெப்பக்குறைகடத்தியான போர்வையாகவும் அதிர்வுகளைத் தாங்கும் மெத்தையாகவும் விளங்குகிறது. அண்மையில் இது ஓர் முதன்மை அகச்சுரப்பித் தொகுதி உறுப்பு எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[1]. கொழுப்பிழையம் லெப்டின், ஈத்திரோசன், இரெசிச்டின், சைட்டோகைன் TNFα போன்ற இயக்குநீர்களை உருவாக்குகிறது.

கொழுப்பிழையங்கள் மற்ற உறுப்புத் தொகுதிகளில் தாக்கம் ஏற்படுத்துகையில் உடல் நோய் வாய்படலாம். மனிதர்களுக்கும் பெரும்பான்மையான விலங்கினங்குக்கும் உடற் பருமன் அல்லது கூடிய எடை என்பது உடல் எடையை விட உடல் கொழுப்பைச் (கொழுப்பிழைய அளவு) சார்ந்ததாக உள்ளது. கொழுப்பிழையங்கள் இருவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: வெள்ளைக் கொழுப்பிழையம் (WAT) மற்றும் பழுப்புக் கொழுப்பிழையம் (BAT). கொழுப்பிழையம் உருவாவது கொழுப்பிழைய மரபணுவால் கட்டுபடுத்தப்படுவதாக தெரிகிறது.

கொழுப்பிழையம் – குறிப்பாக பழுப்புக் கொழுப்பிழையம் – முதன்முதலாக 1551இல் சுவிட்சர்லாந்து இயற்கையாளர் கான்ராடு கெசுனரால் கண்டறியப்பட்டது.[2]

நுண்நோக்கியல்

இது நுண்ணோக்கியில் , வெற்று செல் ஆக காணப்படுகிறது.

மேற்சான்றுகள்

  1. Kershaw EE, Flier JS (2004). "Adipose tissue as an endocrine organ". J. Clin. Endocrinol. Metab. 89 (6): 2548–56. doi:10.1210/jc.2004-0395. பப்மெட்:15181022.
  2. Cannon, B; Nedergaard, J (2008). "Developmental biology: Neither fat nor flesh". Nature 454 (7207): 947–8. doi:10.1038/454947a. பப்மெட்:18719573.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.